முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரேபரேலி வாக்குச்சாவடிக்கு ராகுல்காந்தி திடீர் விசிட்

திங்கட்கிழமை, 20 மே 2024      இந்தியா
Rahul 2024-05-20

Source: provided

ரேபரேலி : ரேபரேலியில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச் சாவடியில் காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் காந்தி ஆய்வு நடத்தினார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி போட்டியிடும் ரேபரேலி மக்களவைத் தொகுதிக்கு நேற்று 5-ஆம் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற்றன. இந்த நிலையில், டெல்லியில் இருந்து லக்னோ விமான நிலையத்துக்கு நேற்று காலை வருகைதந்த ராகுல் காந்தி, சாலை வழியாக ரேபரேலிக்கு சென்றார்.ஹனுமன் கோயிலில் தரிசனம் செய்த ராகுல் காந்தி, மகாத்மா காந்தி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடி மையத்தில் ஆய்வு செய்தார். 

நாட்டில் 18-ஆவது மக்களவையைத் தோ்வு செய்ய ஏழு கட்டங்களாக (ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25, ஜூன் 1) தோ்தல் நடைபெற்று வருகிறது.ஏற்கெனவே ராகுல் காந்தி போட்டியிட்ட மற்றொரு தொகுதியான வயநாட்டில் கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி வாக்குப்பதிவு நிறைவு பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து