முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓ.பி.சி. சான்றிதழ்கள் ரத்து: ஐகோர்ட்டு தீர்ப்புக்கு மம்தா கடும் எதிர்ப்பு

வியாழக்கிழமை, 23 மே 2024      உலகம்
Mamata-1

கொல்கத்தா, 37 பிரிவினருக்கு வழங்கப்பட்ட ஓ.பி.சி. சான்றிதழ்களை ரத்து செய்து கொல்கத்தா  ஐகோர்ட் உத்தரவிட்டது. இந்த நிலையில்  இந்த தீர்ப்பை ஏற்க மாட்டோம் என்றும்,  ஓ.பி.சி. இடஒதுக்கீடு தொடரும் என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 

மேற்கு வங்க மாநிலத்தில் 37 பிரிவினருக்கு கடந்த 2010-ம் ஆண்டுக்கு பின்னர் வழங்கப்பட்ட ஓ.பி.சி. சான்றிதழ்களை ரத்து செய்து கொல்கத்தா ஐகோர்ட்டு நேற்று முன்தினம் உத்தரவிட்டது. 

மேலும், 1993ம் ஆண்டு சட்டத்தின்படி ஓ.பி.சி. புதிய பட்டியலை தயாரிக்குமாறு மேற்கு வங்காள மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு காரணமாக அம்மாநிலத்தில் 5 லட்சம் ஓ.பி.சி. சான்றிதழ்கள் ரத்து செய்யப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இந்த தீர்ப்பை ஏற்க மாட்டோம் என கூறியுள்ள அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, ஓ.பி.சி. இடஒதுக்கீடு தொடரும் என்றும், இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், 

கோர்ட்டில் உள்ள அனைவரும் மோசமானவர்கள் அல்ல. நான் நீதித்துறையை மதிக்கிறேன். ஆனால் இந்த உத்தரவை பிறப்பித்தவரின் தீர்ப்பை நான் ஏற்கவில்லை. அதை ஏற்க மாட்டேன். 

ஓ.பி.சி. இட ஒதுக்கீடு தொடரும். தேவைப்பட்டால் சுப்ரீம் கோர்ட்டை நாடுவேன். அவர்களுக்கு என்னை தெரியாது. நான் அவர்களின் விருப்பத்துக்கு தலைவணங்குபவள் அல்ல. சட்டப்படி ஓ.பி.சி. இடஒதுக்கீட்டை அமல்படுத்தினோம். நாங்கள் ஆய்வுகளை நடத்தினோம். 

பல அறிக்கைகளை சமர்ப்பித்த குழுவின் தலைவராக உபென் பிஸ்வாஸ் இருந்தார். அப்போதும் கூட, இந்த விஷயத்தில் கோர்ட்டில் வழக்குகள் இருந்தன. ஆனால் மேல்முறையீடு செய்தவர்கள் அந்த வழக்குகளில் தோல்வியடைந்தனர். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து