முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கற்பக விநாயகா மருத்துவ அறிவியல் கல்லூரியில் படிக்க சேர்க்கை ஆணை: மாணவிக்கு வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

வியாழக்கிழமை, 23 மே 2024      தமிழகம்
CM1-2024-05-23

சென்னை, சென்னை முகாம் அலுவலகத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின், புதுக்கோட்டை மாவட்டம், தேக்காட்டூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு இல்லத்தில் வசிக்கும் மாணவி ஷரினாகிறிஸ்டுக்கு கற்பக விநாயகா மருத்துவ அறிவியல் கல்லூரியில் பி.எஸ்.சி.(அனஸ்தீஷியா) பட்டப்படிப்பு படித்திட உதவி செய்து, அக்கல்லூரியில் படிப்பதற்கான சேர்க்கை ஆணையினை வழங்கினார். மேலும், அம்மாணவிக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய திருக்குறள் உரை நூல் மற்றும் பேனாவையும் பரிசாக வழங்கி வாழ்த்தினார். 

தேக்காட்டூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு இல்லத்தில் வசித்து வரும் சுசந்த அஜித்குமார் – மரியகிறிஸ்டின் தம்பதியரின் மகள்கள்  ஷரினாகிறிஸ்ட் மற்றும்  மெனிஷாகிறிஸ்ட் ஆகியோர் கைபேசி வாங்குவதற்காக தாங்கள் சேமித்து வைத்திருந்த பணத்தை தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதிக்காக வழங்கினார்கள்.

அவர்களின் இச்செயலை பாராட்டி, கல்விக்கு பயன்படும் வகையில்  அமைச்சர்கள் உதயநிதி  அன்பில் மகேஸ் பொய்யாமொழி கையடக்க கணினிகளை வழங்கி வாழ்த்தினார்கள். 

மாணவி ஷரினாகிறிஸ்ட், 12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 468 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மருத்துவத் துறையோடு தொடர்புடைய பேரா மெடிக்கல்  பிரிவில் பி.எஸ்.சி.(அனஸ்தீஷியா) பட்டப்படிப்பு படித்திட உதவிடுமாறு அம்மாணவியின் தாயார் மரியகிறிஸ்டின், முதல்வருக்கு  கடிதம் மூலம் கோரியிருந்தார். 

அதனை கனிவுடன் பரிசீலித்த முதல்வர், மாணவி ஷரினாகிறிஸ்டுக்கு கற்பக விநாயகா மருத்துவ அறிவியல் கல்லூரியில் பி.எஸ்.சி.(அனஸ்தீஷியா)  பட்டப்படிப்பு படித்திட சேர்க்கை ஆணையினை வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து