முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மெயின் அருவியை தவிர குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

வியாழக்கிழமை, 23 மே 2024      தமிழகம்
Kutralam--2023-07-06

Source: provided

தென்காசி:குற்றாலத்தின் மெயின் அருவி தவிர மற்ற அருவிகளில் குளிக்க நேற்று மாலை முதல் அனுமதி வழங்கபட்டுள்ளது. பழைய குற்றால அருவியில் காலை 6 மணி முதல் மாலை 5.30 மணி வரை மட்டுமே குளிக்க அனுமதிஅளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மெயின் அருவி கரையில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் ஓரிரு நாளில் குளிக்க அனுமதி அளிக்கப்படும் என தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டத்தில் குற்றால அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து தற்போது நிலவி வரும் கனமழை எச்சரிக்கை காரணமாக மறு உத்தரவு வரும் வரை குற்றாலம் உட்பட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. தற்போது குற்றால அருவிகளில் வெள்ளம் குறைந்து தண்ணீர் வரத்து சீரான அடுத்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு நேற்று மாலை முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மெயின் அருவி கரையில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் ஓரிரு நாளில் குளிக்க அனுமதி அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து