முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இயல்பை விட கோடை மழை தமிழ்நாட்டில் அதிக பொழிவு : வானிலை ஆய்வு மையம் தகவல்

சனிக்கிழமை, 25 மே 2024      தமிழகம்
Weather-Center 1

Source: provided

சென்னை : தமிழகத்தில் கோடை மழை இயல்பை விட அதிகமாக 29 சதவீதம் பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் 1ம் தேதி முதல் 24 ஆம் தேதி வரையிலான மழை அளவுகளை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சராசரியாக 110.3 மில்லிமீட்டர் மழை தமிழ்நாடு முழுவதும் பதிவாக வேண்டும். மார்ச் 1ம் தேதி முதல் கடந்த மே 10 ம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் கோடைக் காலம் கடுமையாக இருந்தது. பல இடங்களிலும் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் பதிவானதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி இருந்தனர். அந்த காலகட்டத்தில் கோடைகால மழை மிகக் குறைவாக செய்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இதனிடையே கடந்த 15 நாட்களுக்கும் மேலாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வெப்பம் பெருமளவு குறைந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில் மார்ச் ஒன்றாம் தேதி முதல் 24ம் தேதி வரையிலான மழை பொழிவு அளவுகளை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த காலகட்டத்தில் 142.5 மில்லி மீட்டர் மழை தமிழ்நாடு முழுவதும் பதிவாகியுள்ளது. இது வழக்கமான மழைப்பொழிவை விட 29 சதவீதம் அதிகம் ஆகும்.

தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக கன்னியகுமரியில் 39 சென்டிமீட்டர் மழையும், நீலகிரியில் 31 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. சதவீத அடிப்படையில் அதிகபட்சமாக திண்டுக்கல்லில் 29 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. இது இயல்பான மழை அளவை விட 91 சதவீதம் அதிகமாகும். இதற்கு அடுத்தபடியாக கோவையில் 27 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இயல்பான மழைப்பொழிவைவிட கோவையில் 88 சதவீதம் மழை அதிகமாக பதிவாகியுள்ளது. தமிழகத்திலேயே மிகக்குறைந்த பட்சமாக ராணிப்பேட்டையில் 7.0 மில்லி மீட்டர் மழை மட்டுமே பதிவாகியுள்ளது. இது இயல்பான மழை அளவில் காட்டிலும் 88 சதவீதம் குறைவாகும்.

சென்னையை பொறுத்தவரை 59 சதவீதம் இயல்பான மழைப்பொழிவு குறைந்து 18.1 மில்லி மீட்டர் மழை மட்டுமே பதிவாகி உள்ளது. இதேபோல் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் கோடை மழை இயல்பான அளவை காட்டிலும் குறைவாகவே பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.a

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து