முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி-20 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவின் வெற்றி தொடருமா? - பாக்.கை இன்று எதிர்கொள்கிறது

சனிக்கிழமை, 8 ஜூன் 2024      விளையாட்டு
India-Pak 2024-05-08

Source: provided

நியூயார்க் : டி-20 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் இன்று இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்திய அணியின் வெற்றித் தொடருமா என்று ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

அயர்லாந்தை...

9-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 20 அணிகளும் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 5 நாடுகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வீழ்த்தியது.

பாகிஸ்தானை...

இந்திய அணி 2-வது போட்டியில் பாகிஸ்தானை இன்று (9-ந்தேதி) எதிர் கொள்கிறது. இந்த ஆட்டம் நியூயார்க்கில் உள்ள நசாவு ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. அமெரிக்காவிடம் அதிர்ச்சிகரமாக வீழ்ந்து நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தானை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இந்தியா இருக்கிறது. 

ரோகித்துக்கு காயம்... 

அயர்லாந்துக்கு எதிராக பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். இதனால் பாகிஸ்தானுக்கு எதிராக நம்பிக்கையுடன் ஆடுவார்கள். பேட்டிங்கில் ரோகித் சர்மா, ரிஷப் பண்டும், பந்துவீச்சில் ஹர்திக் பாண்ட்யா, பும்ரா, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் திறமையை வெளிப்படுத்தினார்கள். அயர்லாந்துக்கு எதிராக கேப்டன் ரோகித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டது. அவர் முழு உடல் தகுதியுடன் இல்லாவிட்டால் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக செயல்படுவார். அவரது இடத்தில் ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

வெளியேறும் நிலை... 

விராட் கோலி தொடக்க ஆட்டத்தில் சிறப்பாக ஆடாவிட்டாலும் அதே தொடக்க வரிசையில் விளையாடுவார். பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணிக்கு இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி உள்ளது. தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவிடம் அதிர்ச்சிகரமாக தோற்றது எதிர்பாராத ஒன்றாகும். இந்தியாவிடமும் தோற்றால் போட்டியில் இருந்து வெளியேறும் நிலை ஏற்படும். இதனால் பாகிஸ்தான் வீரர்கள் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள். 

ஆட்டம் விறுவிறுப்பாக...

அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் அந்த அணியின் பேட்டிங்கும், பந்துவீச்சும் மோசமாக அமைந்தது. மேலும் சூப்பர் ஓவரில் முகமது அமீர் பந்து வீச்சும் மிகவும் மோசமாக இருந்தது. இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றாலே எப்போதும் அதிகமான எதிர்பார்ப்பு இருக்கும். வெற்றிக்காக இரு அணிகளும் கடைசி வரை முயற்சிக்கும் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து