முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரின் மனைவி கல்பனா எம்.எல்.ஏ.வாக பதவியேற்பு

திங்கட்கிழமை, 10 ஜூன் 2024      இந்தியா
Kalpana 2024-06-10

Source: provided

ராஞ்சி : ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் எம்.எல்.ஏ.வாக பதவியேற்றுக்கொண்டார்.

ஜார்க்கண்ட் மாநிலம் காண்டே சட்டப்பேரவைத் தொகுதி எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜார்க்கண்ட் முத்தி மோர்ச்சா(ஜேஎம்எம்) கட்சியின் சர்பராஸ் அகமது ராஜிநாமா செய்ததையடுத்து, அத்தொகுதியில் மக்களவை தேர்தலுடன் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற்றது.

இடைத்தேர்தலில் போட்டியிட்ட கல்பனா சோரன் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் திலீப் குமார் வர்மாவை விட 27 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் அதிகமாகப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து நேற்று (ஜூன் 10) கல்பனா சோரன் எம்.எல்.ஏ.வாக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு சபாநாயகர் ரபீந்திரநாத் மாத்தோ பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

இதன்மூலம், ஜார்க்கண்டில் ஆளுங்கட்சியாக உள்ள ஜார்க்கண்ட் முத்தி மோர்ச்சா(ஜேஎம்எம்) கட்சியின் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸுடனான ஜார்க்கண்ட் முத்தி மோர்ச்சா(ஜேஎம்எம்) தலைமையிலான கூட்டணி மொத்தமுள்ள 81 இடங்களில் 47 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் நில மோசடி புகாரில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு சம்பாயி சோரன் முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து