முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எங்களது நிறுவனங்களில் ஆப்பிள் சாதனங்களுக்கு தடை விதிக்கப்படும் : எலான் மஸ்க் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 11 ஜூன் 2024      உலகம்
Elon musk 2023-07-13

Source: provided

வாஷிங்டன் : எங்களது  நிறுவனங்களில் ஆப்பிள் சாதனங்களுக்கு தடை விதிக்கப்படும் என்று எலான் மஸ்க் அறிவித்துள்ளார். 

ஐபோன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் நிறுவனம், சமீபத்தில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) சார்ந்த பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது. செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி நிறுவனமான ஓபன் ஏ.ஐ. நிறுவனத்தின் மென்பொருளை ஒருங்கிணைத்து தனது புதிய தயாரிப்புகளில் புகுத்த உள்ளதாக அறிவித்தது. 

குறிப்பாக, ஆப்பிள் சாதனங்களில் ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் புகுத்தப்படும் என்றும் ஓபன் ஏ.ஐ. நிறுவனத்தின் சாட்ஜிபிடி சேவை தனது சாதனங்களில் வழங்கப்படும் என்றும் அறிவித்தது. ஆப்பிள் நிறுவனத்தின் இந்த முயற்சிக்கு டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் சி.இ.ஓ. எலான் மஸ்க் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:- தங்களுக்கென சொந்தமாக ஏ.ஐ. தொழில்நுட்பத்தை உருவாக்க முடியாத ஆப்பிள் நிறுவனம், ஓபன் ஏ.ஐ. மூலம் உங்களது (வாடிக்கையாளர்கள்) பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை உறுதிப்படுத்தி விடும் என்பது அபத்தமாக இருக்கிறது. உங்களின் தரவுகளை ஓபன் ஏ.ஐ. இடம் கொடுத்துவிட்டால் அதற்கு என்னவாகும் என்பது பற்றி ஆப்பிள் நிறுவனத்துக்கு எந்த அக்கறையும் இல்லை. 

அவர்கள் உங்களை விற்கிறார்கள். ஒருவேளை ஆப்பிள் நிறுவனம் ஓபன் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை ஓ.எஸ். அளவில் ஒருங்கிணைத்தால், எனது நிறுவன வளாகங்களில் ஆப்பிள் சாதனங்களுக்கு தடை விதிக்கப்படும். 

ஆப்பிளின் செயல் ஏற்றுக்கொள்ளவே முடியாத பாதுகாப்பு விதிமீறல். எனது நிறுவனத்திற்குள் வருபவர்கள் தங்களது ஆப்பிள் சாதனங்களை வாசலிலேயே ஒப்படைக்க வேண்டும். அவை அங்கு பாதுகாப்பாக வைக்கப்படும். இவ்வாறு எலான் மஸ்க் கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து