முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாணவர்களுக்கு நலத்திட்டங்களை தி.மு.க. தொடர்ந்து வழங்கி வருகிறது அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு

வியாழக்கிழமை, 13 ஜூன் 2024      தமிழகம்
Anbil 1

Source: provided

சென்னை: மாணவர்களுக்கு நலத்திட்டங்களை தி.மு.க. தொடர்ந்து வழங்கி வருகிறது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ‘காலம் உள்ளவரை கலைஞர்’ நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி ஆயிரம் கல்லூரி மாணவ - மாணவியருக்கு கல்வி உதவித் தொகை மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “திமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கு குறிப்பாக, மாணவர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்குவதை வாடிக்கையாக வைத்திருக்கிறது.

அந்த வகையில் கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி ‘நான் முதல்வன்’ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த அரங்கில்தான் தொடங்கிவைத்தார். அன்றைய தினம் முதல்வருக்கு பிறந்த நாள். அந்த கொண்டாட்டத்துக்கு முன்னதாக இங்கு வந்து தனது கனவு திட்டமான ‘நான் முதல்வன்’ திட்டத்தை தொடங்கிவைத்தார். இத்திட்டத்தின் மூலம் இதுவரை 28 லட்சம் மாணவ - மாணவியர் பயன்பெற்றுள்ளனர். அவர்களில் 25 பேர் லண்டன் சென்றுள்ளனர்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த திட்டங்கள் உலகத்துக்கே வழிகாட்டியாக அமைந்துள்ளது. கல்லூரி மாணவர்கள் அனைவரும் கருணாநிதி நினைவிடத்துக்கு சென்று பார்க்க வேண்டும். அப்போதுதான் அவரது ஆட்சிக் காலத்தில் என்னென்ன திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. எல்லா தரப்பினரின் உயர்வுக்கும் கருணாநிதி எவ்வாறு காரணமாக இருந்தார் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

உங்களை திமுக கட்சியில் சேரச் சொல்லவில்லை. அதேசமயம் நீங்கள் எல்லோரும் திமுகவுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். உங்களிடம் ஸ்மார்ட் போன் இருக்கிறது. அதில் கூகுளுக்குள் சென்று திமுக அரசின் சாதனைகளைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். அனைவரும் படிப்பில் முழு கவனம் செலுத்தி பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் பெருமை தேடித் தர வேண்டும்” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து