முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீட் தேர்வில் கருணை மதிப்பெண் ரத்து:முறைகேட்டில் இருந்த தப்ப மத்திய அரசு முயற்சிக்கிறது முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டம்

வியாழக்கிழமை, 13 ஜூன் 2024      தமிழகம்
Stalin 2021 11 29

Source: provided

சென்னை: நீட் தேர்வில் கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்டுள்ளது மத்திய அரசின் திறமையின்மையை காட்டுவதாகவும்,  முறைகேட்டில் இருந்த தப்ப மத்திய அரசு முயற்சிப்பதாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: கருணை மதிப்பெண்களை ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட்டில் ஒப்புக்கொண்டதன் மூலம் சமீபத்திய நீட் முறைகேட்டிலிருந்து இருந்து தப்பிக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது. இது அவர்களின் திறமையின்மையின் மற்றொரு ஒப்புதலாகும்.

மாநிலங்களின் உரிமையைப் பறித்த பிறகு, முறைகேடுகளின் மையமாக விளங்கும் பிரச்னைகள் மற்றும் ஒழுங்கற்ற முறையில் தேர்வுகளை நடத்துதல் போன்ற முக்கியப் பிரச்னைகளில் இருந்து கவனத்தைத் திசைதிருப்ப அனுமதிக்கக் கூடாது.மத்திய அரசின் திறமையின்மையையும், லட்சக்கணக்கான மாணவர்களின் வேதனையைப் பற்றிய அவர்களின் அக்கறையின்மையையும் கண்டிக்கும் அதே வேளையில், மருத்துவப் படிப்புகளுக்கான தேர்வு முறையைத் தீர்மானிப்பதில் மாநில அரசுகளின் பங்கை மீட்டெடுப்பதுதான் இந்தப் பிரச்னைக்கு ஒரே தீர்வு என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 weeks 22 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 weeks 22 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து