முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விக்கிரவாண்டி இடைதேர்தலில் போட்டி நேர விரயம், வீண் செலவு: அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

திங்கட்கிழமை, 17 ஜூன் 2024      தமிழகம்      அரசியல்
Jayakumar 2023 04 15

சென்னை, விக்கிரவாண்டியில் இடைதேர்தலில் போட்டியிடுவது நேர விரயம், வீண் செலவு என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை பட்டினம் பாக்கத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவரது இல்லத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது., “இஸ்லாமியர்களுக்கு பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகள். மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட ரயில் விபத்து அதிர்ச்சி தரக்கூடிய வேதனையான செய்தியாக உள்ளது. தொடர் ரயில் விபத்துகளால் ரயிலில் பயணம் செய்ய அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய ரயில்வே துறை விழிப்புணர்வுடன் இருந்து விபத்துகளை தவிர்க்க வேண்டும்.

அரசியல் வரலாற்றில் திமுக பலமுறை தோல்வி அடைந்துள்ளது. ஆர்.கே.நகர் தேர்தலில் டெபாசிட் இழந்தனர். புதுக்கோட்டை இடைத்தேர்தலில் திமுக ஏன் போட்டியிடவில்லை. விக்கிரவாண்டியில் அமைச்சர்கள் அனைவரும் முகாமிடுவார்கள். அதிகார துஷ்பிரயோகம் நடைபெறும். இந்த இடைதேர்தலில் போட்டியிடுவது  நேர விரயம்... வீண் செலவு... (Waste of Time, Waste of Energy, Waste of Money, Waste of Fuel.) அதிமுகவிற்கு வாக்களிக்கும் தொண்டர்கள் இந்த இடைத்தேர்தலை புறக்கணிப்பார்கள். 

பாராளுமன்ற தேர்தலில் திமுக 6% வாக்குகள் கடந்த தேர்தலை விட குறைவாக பெற்றுள்ளது. 2026 தேர்தலில் அதிமுக வெற்றி பெறும். அண்ணாமலையை மாற்றி பின்லேடனே வந்தாலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை. அண்ணாமலையின் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்றால் பாஜக தனித்து நிற்க வேண்டும். அதை தவிர்த்து பத்து பேர் உடனான கூட்டணியை சேர்த்து 10% வாக்கு வங்கியை பெற்று விட்டோம் என்று கூறினால் அது சரியல்ல. தமிழ்நாட்டில் பாஜகவிற்கு இடமே கிடையாது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து