முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமித்ஷாவை சந்தித்தது ஏன்? - கௌதம் கம்பீர் விளக்கம்

திங்கட்கிழமை, 17 ஜூன் 2024      விளையாட்டு
Gambhir 2023 09 14

Source: provided

புதுடெல்லி : இந்திய அணியின் முன்னாள் வீரரான கௌதம் கம்பீர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்துள்ளார்.

ஆளும் பாஜக சார்பில் கிழக்கு டெல்லியின் எம்.பி.யாக பதவி வகித்த கௌதம் கம்பீர், கிரிக்கெட் பயிற்சியில் கவனம் செலுத்துவதற்காக தீவிர அரசியலில் இருந்து சிறிது ஓய்வு எடுத்துள்ளார்.

இந்த நிலையில், மரியாதை நிமித்தமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கௌதம் கம்பீர் சந்தித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் கௌதம் கம்பீர் பதிவிட்டிருப்பதாவது: அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தேன். உள்துறை அமைச்சராக பதவி வகிக்கும் அமித் ஷா இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை மேலும் வலுப்படுத்துவார் எனப் பதிவிட்டுள்ளார்.

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக பதவி வகித்து வரும் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் இந்த டி20 உலகக் கோப்பைத் தொடருடன் நிறைவடைகிறது. இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக செய்திகள் வலம் வருகின்றன. துபையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்திய அணியை வழி நடத்துவதற்கான விருப்பம் இருப்பதாக கம்பீரும் தெரிவித்திருந்தார்.

அண்மையில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸின் ஆலோசகராக செயல்பட்ட கௌதம் கம்பீர், அந்த அணி சாம்பியன் பட்டம் வெல்ல உதவியது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து