முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்க தேச நிலச்சரிவு: அகதிகள் 9 பேர் பலி

புதன்கிழமை, 19 ஜூன் 2024      உலகம்
Bangladesh 2024-06-19

Source: provided

டாக்கா : தென்கிழக்கு வங்கதேசத்தில் பல்வேறு குடியிருப்புப் பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்திய மழையால் உருவான நிலச்சரிவால் ரோஹிங்கியா முகாம்களில் தங்கியிருந்த குறைந்தது 9 பேர் பலியானதாக புதன்கிழமை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அகதிகள் மறுவாழ்வு துறையின் கூடுதல் ஆணையர் முகமது சம்சுதுஷா, காக்ஸ் பஜார் மாவட்டத்தில் உள்ள முகாம் எண் 9 மற்றும் 10 நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக செய்தியாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.செவ்வாய்க்கிழமை முதல் கடும்மழை பொழிந்துவரும் மாவட்டத்தில் ரோஹிங்கியா மக்கள் 33 முகாம்களில் தங்கியுள்ளனர். அபாயமான பகுதிகளில் உள்ளவர்களை மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக முகமது சம்சுதுஷா தெரிவித்தார்.

கடும் பருவமழை காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரை வங்கதேசத்தின் மலைப்பகுதிகள் அதிக மழையை எதிர்கொள்கின்றன. இந்தப் பகுதிகளில் விவசாயத்துக்காகவும் வீடு கட்டவும் வனப்பகுதிகள் அழிக்கப்பட்டதால் நிலச்சரிவு அடிக்கடி ஏற்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து