முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிரம்பின் வலைதள கணக்கு மீதான கட்டுப்பாடுகளை நீக்கிய மெட்டா

சனிக்கிழமை, 13 ஜூலை 2024      உலகம்
Trump 2024-07-13

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் வேட்பாளராக களமிறங்கி உள்ளதால் டிரம்பின் வலைதள கணக்குகள் மீதான கட்டுப்பாடுகளை மெட்டா நிறுவனம் நீக்கியுள்ளது. 

அமெரிக்காவில் விரைவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஜோ  பைடனின் ஆளும் ஜனநாயக காட்சியை எதிர்த்து குடியரசுக் காட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். 

கடந்த 2017 தேர்தலில் வெற்றி பெற்று அதிபரான டிரம்ப் 2021-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில்  தோல்வியைத் தழுவினார். அவரது தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாத டிரம்பின்  ஆதரவாளர்கள் வெள்ளை மாளிகைக்குள்  அத்துமீறி நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டனர். 

மேலும் தனது சமூக வலைதள பக்கங்களில் கலவரங்களில் ஈடுபடுபவர்களை டிரம்ப் தொடர்ந்து ஊக்குவித்து வந்ததால் 2021-ல் வெள்ளை மாளிகை கலவரம் நடந்த அடுத்த நாளே  டிரம்பின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் மெட்டா நிறுவனத்தால் முடக்கப்பட்டன. 

அதனைத் தொடர்ந்து கடந்த 2023 பிப்ரவரியில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அவரது கணக்குகள் மீதான தடை நீக்கப்பட்டது. இந்நிலையில் டிரம்ப் மீண்டும் அதிபர் தேர்தல் வேட்பாளராக களமிறங்கியுள்ளதால் அவரது கருத்து சுதந்திரத்தை மதித்து கட்டுப்பாடுகள் அனைத்தையும் நீக்குவதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. 

ஆனால் வெறுப்பு பேச்சு, கலவரத்தைத் தூண்டும் பதிவு உள்ளிட்டவற்றிற்கு எதிரான விதிமுறைகள் அவரது கணக்குகளுக்கு பொருந்தும் என்றும் மெட்டா தெரிவித்துள்ளது. 

முன்னதாக  டிரம்பின் டுவிட்டர் மற்றும் யூடியூப் கணக்குகள் மீதும் தடை விதிக்கப்பட்டது. மேலும்  சமீபத்தில் நடிகைக்கு பாலியல் தொல்லை அளித்து அதை மறைக்க  பணம் கொடுத்த வழக்கில் டிரம்ப் குற்றவாளி என்று நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து