முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு : சென்னை அப்பல்லோவில் அனுமதி

சனிக்கிழமை, 13 ஜூலை 2024      தமிழகம்
Duraimurugan 2022 12 11

Source: provided

சென்னை : திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அமைச்சர் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். 

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில்  தி.மு.க வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதியில் பல்வேறு இடங்களில் பட்டாசுகளை வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் தி.மு.க.வினர் கொண்டாடி வருகிறார்கள். அதே போல அண்ணா அறிவாலயத்திலும் தி.மு.கவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த நிலையில் அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அங்கு திரண்டிருந்த தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். 

இந்த நிலையில் முதல்வர்  மு.க.ஸ்டாலினுடன் சென்னை அண்ணா அறிவாலயம் வந்திருந்த அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. 

தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன் சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் அமைச்சர் துரைமுருகனை அனுமதித்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து