முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

சனிக்கிழமை, 13 ஜூலை 2024      தமிழகம்
Kurdalam 2023 06 20

Source: provided

தென்காசி : வெள்ளப்பெருக்கு குறைந்ததால் குற்றால அருவிகளில் குளிக்க நேற்று சுற்றுலா பயணிகளுக்கு  அனுமதி அளிக்கப்பட்டது. 

தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள், செங்கோட்டை, புளியரை, இலஞ்சி, தென்காசி நகரம், பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை முதல் தொடர்ந்து சாரல் மழை பெய்தது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை நீடித்ததால் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. 

சிறிது நேரத்தில் பழைய குற்றாலம், ஐந்தருவி, மெயின் அருவியில் வெள்ளப்பெருக்காக மாறியதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி குளிக்க தடை விதிக்கப்பட்டது. 

ஐந்தருவில் 5 கிளைகளிலும் ஆர்ப்பரித்து தண்ணீர் கொட்டியது. மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டி ஆக்ரோஷமாக தண்ணீர் விழுந்தது. இந்த நிலையில் நேற்று  காலையில் மழை குறைந்து அருவிகளில் வெள்ளப்பெருக்கும் குறைந்ததால் புலி அருவி, பழைய குற்றாலம் அருவிகளில் காலை முதலே சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

ஐந்தருவி, மெயின் அருவியிலும் தண்ணீரின் சீற்றம் குறைந்ததால் நேற்று காலை சுற்றுலா பயணிகள் அங்கும் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். தென்காசி மற்றும் குற்றாலம் பகுதிகளில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. 

குளிர்ந்த காற்றுடன் ரம்மியமான சூழ்நிலை நிலவி வருவதாலும், நேற்று விடுமுறை தினம் என்பதாலும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை காலை முதலே அதிகமாக காணப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து