முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரபல திரைப்பட இயக்குனர் ரவி ஷங்கர் தூக்கிட்டு தற்கொலை

சனிக்கிழமை, 13 ஜூலை 2024      சினிமா
Ravi-Shankar 2024-07-13

Source: provided

 சென்னை : வருஷமெல்லாம் வசந்தம் படத்தை இயக்கிய ரவி ஷங்கர்(63), சென்னையில் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இயக்குனர் விக்ரமனிடம் உதவியாளராக பணியாற்றியவர் ரவி ஷங்கர். சரத்குமார் நடித்த சூர்ய வம்சம் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியதோடு, அந்த படத்தில் இடம் பெற்ற ஹிட் பாடலான ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ என்ற பாடலையும் எழுதினார். 

பின்னர் மனோஜ் பாரதிராஜா நடிப்பில் வெளியான வருஷமெல்லாம் வசந்தம் என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தில் இடம் பெற்ற எல்லா பாடல்களையும் எழுதி இருந்தார். குறிப்பாக இதில் இடம் பெற்ற எங்கே அந்த வெண்ணிலா? என்ற பாடல் சூப்பர் ஹிட் ஆனது. 

இந்த படத்திற்கு பின் ரவி ஷங்கர் வேறு படங்கள் எதுவும் இயக்கவில்லை. திருமணமே செய்து கொள்ளாமல் சென்னை கே கே நகரில் ஒரு சிறிய வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இவர் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  தனிமை மற்றும் பட வாய்ப்பு இல்லாமல் போனது என அவர் மன அழுத்தத்தில் இருந்ததால் தற்கொலை செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து