முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவேங்கடம் என்கவுண்டர் நடந்த இடத்தில் நீதிபதி ஆய்வு

திங்கட்கிழமை, 15 ஜூலை 2024      தமிழகம்
Thiruvenkadam-2024-07-15

சென்னை, திருவேங்கடம் என்கவுண்டர் நடந்த இடத்தில் நீதிபதி நேற்று ஆய்வு செய்தார். மேலும் துப்பாக்கிச் சூடு நடத்திய காவல் ஆய்வாளரிடமும் நீதிபதி விசாரணை மேற்கொண்டார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் (52) கடந்த 5-ம் தேதி மாலை பெரம்பூர் வேணுகோபால் சாமி கோயில் தெருவில் உள்ள அவரது வீட்டின் முன்பு மர்மக் கும்பலால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இக்கொலை சென்னை மட்டும் அல்லாமல் தமிழகத்தையே உலுக்கியது. 

இந்த கொலை தொடர்பாக ராணிப்பேட்டை மாவட்டம், காட்பாடியில் உள்ள பொன்னை பகுதியைச் சேர்ந்த பொன்னை பாலு (39), அவரது கூட்டாளிகள் பெரம்பூர் பொன்னுசாமி நகர் திருமலை (45), திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை மணிவண்ணன் (26), குன்றத்தூரைச் சேர்ந்த திருவேங்கடம் (33) ஆகியோர் உட்பட 11 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். பின்னர், அனைவரும் நீதிமன்ற காவலில் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிரபல ரவுடியான ஆற்காடு சுரேஷின் தம்பியான பொன்னை பாலு மூளையாக செயல்பட்டது தெரியவந்தது.

கொலைத் திட்டம் எப்படி போடப்பட்டது உள்பட பல்வேறு கேள்விகளுக்கு விடை தெரிவதற்காக சிறையில் உள்ள 11 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் முடிவு செய்தனர். அதன்படி, கடந்த 11-ம் தேதி, 11 பேரையும் 5 நாள் காவலில் விசாரிக்க போலீஸாருக்கு எழும்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து, 11 பேரிடமும் சென்னை பரங்கிமலை பகுதியில் தனித்தனியாகவும், குழுவாகவும் விசாரிக்கப்பட்டது. குறிப்பாக, வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட பொன்னை பாலுவிடமும், 4-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட திருவேங்கடத்திடமும் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் திருவேங்கடத்திடம் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக மேலும் தகவல்களை திரட்டுவதற்காகவும் ஆயுதங்கள் பதுக்கி வைத்திருந்தால் பறிமுதல் செய்யவும் அவரை மணலிக்கு போலீஸ் வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.

ரெட்டேரி ஏரிக்கரை ஆட்டு மந்தை செல்லும் வழியில் இயற்கை உபாதையை கழிக்க வேண்டும் என திருவேங்கடம் சொன்னதால் போலீஸார் வாகனத்தை நிறுத்தியுள்ளனர். அப்போது அவர்களை தள்ளிவிட்டு திருவேங்கடம் தப்பினார். பின்னர் அவர் மணலி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வெஜிடேரியன் வில்லேஜ் பகுதியிலுள்ள ஒரு தகர கொட்டகையில் பதுகினார். அங்கிருந்து வெளியே வரும்படி அவரை போலீஸார் எச்சரித்தும் வரவில்லை. மாறாக திடீரென அங்கு அவர் ஏற்கெனவே பதுக்கி வைத்திருந்த கள்ளத் துப்பாக்கியை எடுத்து போலீஸாரை நோக்கிச் சுட்டுள்ளார்.

இதையடுத்து போலீஸார் பதிலுக்கு துப்பாக்கிச் சூடு நடத்தியதில் திருவேங்கடம் சம்பவ இடத்திலேயே குண்டு பாய்ந்து உயிரிழந்தார். இந்த என்கவுண்டர் தொடர்பாக மணலி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடம் போலீஸாரால் என்கவுண்டர் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரம் குறித்து மாதவரம் குற்றவியல் நீதிமன்ற நடுவர் தீபா சம்பவ இடத்தில் நேற்று (திங்கள்கிழமை) ஆய்வு மேற்கொண்டார். மேலும், போலீஸ் வாகனத்தில் திருவேங்கடத்தை அழைத்துச் சென்ற போலீஸார், அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய காவல் ஆய்வாளர் ஆகியோரிடம் தனித்தனியாக அவர் விசாரணை மேற்கொண்டார். இவை அனைத்தும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து