எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தருமபுரி, கர்நாடகாவின் கபினி அணையிலிருந்து 20 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் தமிழக எல்லை பிலி குண்டுலுக்கு வந்தடைந்தது. காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடிக்கு மேல் அதிகரித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. கர்நாடக மாநிலத்தின் கபினி அணை நிரம்பியதால் 20 ஆயிரம் கன அடி தண்ணீர் உபரிநீராக அணையிலிருந்து வெளியேற்றப்படுகிறது. கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து 1,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அவ்வாறு வெளியேற்றப்பட்ட நீர் நேற்று கர்நாடக மாநிலம் கொள்ளேகால் பகுதி வந்தடைந்தது.
தருமபுரி காவிரி ஆற்றில் 4 ஆயிரத்து 500 கன அடியாக இருந்த நீர்வரத்து, தற்போது மெல்ல மெல்ல உயர்ந்து 6 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. தமிழகத்திற்கு ஒரு டிஎம்சி திறக்க முடியாது என்றும், விநாடிக்கு 8 ஆயிரம் கன அடி நீர் மட்டுமே திறக்க முடியும் என கர்நாடக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
கனமழை காரணமாக முன்னெச்சரிக்கையாக தற்போது காவிரி ஆற்றில் நீர் திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று மாலை தமிழக எல்லைக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது காவிரி நீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலு பகுதிக்கு வந்தடைந்தது. கர்நாடகாவில் திறக்கப்பட்ட நீர் தமிழக எல்லை வந்தடையும் பொழுது நீர்வரத்து படிப்படியாக உயர்ந்து தற்போது பத்தாயிரம் கன அடிக்கு மேல் அதிகரித்துள்ளது.
மேலும், நேற்று இரவு ஒகேனக்கல்லை வந்தடைந்த காவிரி நீர்வரத்து மேலும் அதிகரித்து இன்று காலை மேட்டூர் அணைக்குச் சென்றடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே தமிழகத்திற்கான நீர் பங்கீட்டை வழங்காமல், மழையால் உபரி நீரை கர்நாடகா திறப்பதாக விவசாயிகள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-10-2025.
21 Oct 2025