Idhayam Matrimony

உள்நாட்டு விமானப்பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

செவ்வாய்க்கிழமை, 16 ஜூலை 2024      இந்தியா
Air-India

Source: provided

புதுடெல்லி : உள்நாட்டு விமான போக்குவரத்தில் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் 793.48 லட்சம் பேர் பயணித்துள்ளதாக விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 760.93 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர். இதனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விமானத்தில் பயணிப்போர் எண்ணிக்கை 4.28 சதவீதமாக அதிகரித்துள்ளது. மாதவாரியாக கணக்கிட்டால், ஒரு மாதத்துக்கு 5.76 சதவீதமாக பயணிகள் அதிகரித்து வருகின்றனர். கடந்த 2023ஆம் ஆண்டு 15.2 கோடி பயணிகள் உள்நாட்டு விமானங்களில் பயணித்திருந்த நிலையில், 2022-ல் 12.32 கோடியாக இருந்தது. ஆண்டுவாரியாக இது 23.36 சதவீதமாக வளர்ச்சியாகும்.

விமான போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, விமான இருக்கைகளை முன்பதிவு செய்து பின்னர் பயணிகளால் ரத்து செய்யப்பட்ட விகிதம் மே 2024-ல் 1.7 சதவீதமாக இருந்தது.

இத்தரவுகள் ரத்து செய்யப்பட்டதன் காரணங்களையும் குறிப்பிடுகின்றன. அதன்படி காலநிலை மாற்றம் காரணமாக 39.6 சதவீதமாக பேரும், விமான செயல்பாடுகள் காரணமாக 23 சதவீதமாக பயணிகளும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக 16.4 சதவீதமாக பயணிகளும், இன்ன பிற காரணங்களுக்காக 19.5 சதவீதமாக பயணிகளும் முன்பதிவு செய்த விமானங்களை ரத்து செய்துள்ளனர். எனினும் விமான போக்குவரத்துத் துறையில் பயணிப்போரின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது, விமான பயணத் தேவை அதிகரிப்பையும், நேர்மறையான நம்பிக்கையையும் குறிக்கிறது.

இந்த வளர்ச்சியானது, விமான நிலையங்கள், விமான நிறுவனங்கள், விமான போக்குவரத்துத் துறை ஆகியவற்றின் கூட்டு முயற்சியின் மூலம் கிடைத்த பலன் என விமான போக்குவரத்துத் துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து