முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கவர்னர் ஆனந்த போஸ் பற்றி அவதூறாக பேசக்கூடாது : மம்தாவிற்கு கொல்கத்தா ஐகோர்ட் கண்டிப்பு

புதன்கிழமை, 17 ஜூலை 2024      இந்தியா
Ananda-Bose 2024-05-03

Source: provided

கொல்கத்தா : கவர்னர் ஆனந்த் போஸூக்கு எதிராக அவதூறாக எந்த கருத்தையும் மம்தாவும் அவரது கட்சியினரும் தெரிவிக்க கூடாது என்று கொல்கத்தா ஐகோர்ட் தெரிவித்துள்ளது. 

மேற்கு வங்க கவர்னர் சி.வி. ஆனந்த போஸ் மீது கவர்னர் மாளிகையில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் அளித்தார். ஆனால், அந்த குற்றச்சாட்டை கவர்னர் மறுத்தார். 

இதனையடுத்து, கவர்னர் மாளிகை செல்வதற்கு பெண்கள் பயப்படுகின்றனர் என்று அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேசியிருந்தார். மேலும், அண்மையில் நடைபெற்ற இடை தேர்தலில் வெற்றி பெற்ற 2 திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு பதிவு பிரமாணம் செய்து வைக்காமல் கவர்னர் இழுத்தடித்து வந்தார். அதனால் அந்த 2 எம்.எல்.ஏ.க்களும் இந்த விவகாரம் தொடர்பாக கவர்னரை விமர்சித்தனர். 

இந்நிலையில், மம்தா பானர்ஜி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க கவர்னர் சி.வி. ஆனந்த போஸ் கொல்கத்தா ஐகோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். நேற்று  இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. 

அப்போது, கவர்னருக்கு எதிராக அவதூறாக எந்த கருத்தையும் மம்தாவும் அவரது கட்சியினரும் தெரிவிக்க கூடாது என்று  நீதிபதி கிருஷ்ணாராவ் உத்தரவிட்டார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து