Idhayam Matrimony

தங்கம் விலை சற்று குறைவு

வியாழக்கிழமை, 18 ஜூலை 2024      தமிழகம்
gold 2023 01 26

Source: provided

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 120 குறைந்து விற்பனையானது.

கடந்த 10 நாள்களுக்கு மேலாக ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 54 ஆயிரத்திலேயே இருந்த நிலையில், நேற்று முன்தினம் அதிரடியாக சவரனுக்கு ரூ.720 அதிகரித்து அதிர்ச்சி அளித்தது. ஆடி மாதம் முதல் நாளான நேற்று முன்தினம் சென்னையில் ஆபரணத் தங்கமானது ஒரு சவரன் ரூ.55,360-க்கு விற்பனையானது. இந்த நிலையில், வியாழக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 120 குறைந்து ரூ. 55,240-க்கும், ஒரு கிராமுக்கு ரூ. 15 குறைந்து ரூ. 6,905-க்கும் விற்பனையானது.அதேபோல், வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ. 1.30 குறைந்து ரூ.99.20-க்கும் ஒரு கிலோ ரூ. 99,200-க்கும் விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து