எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
காயம் காரணமாக ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து இந்திய அணியின் இளம் வீராங்கனை ஸ்ரேயங்கா பாட்டீல் விலகியுள்ளார். ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று முன் தினம் (ஜூலை 19) தொடங்கியது. இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்து விளையாடியது. அந்தப் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியின்போது, இந்திய அணியின் இளம் வீராங்கனைகளில் ஒருவரான ஸ்ரேயங்கா பாட்டீலுக்கு ஃபீல்டிங்கின்போது கை விரலில் காயம் ஏற்பட்டது.
இந்த நிலையில், அவர் காயம் காரணமாக ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து விலகியுள்ளது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஸ்ரேயங்கா பாட்டீலுக்குப் பதிலாக இடது கை சுழற்பந்துவீச்சாளரான தனுஜா கன்வர் அணியில் மாற்று வீராங்கனையாக சேர்க்கப்பட்டுள்ளார். 26 வயதாகும் தனுஜா இந்த ஆண்டு மகளிர் பிரீமியர் லீக் தொடரில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடி 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
_______________________________________________________________________
லியோனல் மெஸ்ஸிக்கு கவுரவம்
அண்மையில் நடைபெற்ற கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் அர்ஜெண்டினா அணி 1-0 என்ற கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதன்மூலம் கால்பந்து வரலாற்றில் அதிக கோப்பைகள் (45) வென்ற வீரர் என்ற சாதனையை மெஸ்ஸி படைத்தார்.
நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற போட்டியில் சிகாகோ பயர் அணியை 2 - 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இன்டர் மியாமி க்ளப் வெற்றி பெற்றது.இப்போட்டி நடைபெறுவதற்கு முன்பு கால்பந்து வரலாற்றில் அதிக கோப்பைகள் (45) வென்ற ஜாம்பவான் மெஸ்ஸியை இன்டர் மியாமி க்ளப் கௌரவித்தது. ஆண்டு வாரியாக வென்ற 45 கோப்பைகளின் படங்களை கைகளில் ஏந்தி அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


