முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய பட்ஜெட்டில் விலை குறையும் பொருள்கள் எவை?

செவ்வாய்க்கிழமை, 23 ஜூலை 2024      இந்தியா
Gold 2024-04-06

Source: provided

புதுடெல்லி : பாராளுமன்றத்தில் நேற்று தாக்கலான மத்திய பட்ஜெட்டில் விலை குறையும் பொருட்கள் குறித்த விபரம் வெளியாகி உள்ளது.  

பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதன்மூலம் அவர் தொடர்ந்து 7-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்து சாதனை படைத்துள்ளார். 

இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள இறக்குமதி வரி குறைப்பு விவரம் வருமாறு:-

தங்கம், வெள்ளி ஆகியவற்றிற்கான இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதம் ஆக குறைக்கப்படும். பிளாட்டினத்திற்கான இறக்குமதி வரி 12 சதவீதத்தில் இருந்து வரி 6.4 சதவீதம் ஆக குறைக்கப்படும்.

செல்போன், செல்போன் உதிரி பாகங்களின் இறக்குமதி வரி 15 சதவீதம் ஆக குறைக்கப்படும்.சில குறிப்பிட்ட தோல் பொருட்களுக்கான வரி விதிப்புகளும் குறைக்கப்படும். மருத்துவ உபகரணங்கள், சில மருந்துகளுக்கு சுங்க வரி குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சூரிய ஒளி மின்சாரத்திற்கு பயன்படும் கருவிகளுக்கு இறக்குமதி வரி குறைக்கப்படுகிறது. இதையடுத்து இறக்குமதி செய்யப்படும் தங்கம், வெள்ளி, வைரம், பிளாட்டினம் மற்றும் செல்போன் போன்றவைகளின் விலை குறைகிறது. மேலும் புற்றுநோய் மருந்துகள், தோல் பொருட்கள், கடல்சார் உணவுகளும் விலை குறைகிறது.

இதேபோல் பிளாஸ்டிக் பொருட்களுக்கான சுங்கவரி 15 சதவீதத்தில் இருந்து 25 சதவீதம் ஆக அதிகரிக்கப்படும். தொலைத்தொடர்பு சாதனங்களுக்கான சுங்க வரி 10ல் இருந்து 15 சதவீதமாக அதிகரிக்கப்படும். அம்மோனியம் நைட்ரேட், பிளாஸ்டிக் சாதனங்கள் மற்றும் தொலைத் தொடர்பு சாதனங்களின் விலை உயர்கிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து