முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வயநாடு நிலச்சரிவு: 4-ம் நாள் தேடுதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிருடன் மீட்பு

வெள்ளிக்கிழமை, 2 ஆகஸ்ட் 2024      இந்தியா
Kerala-2024-07-30

சூரல்மலா, வயநாட்டில் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட சூரல்மலா பகுதியில் மீட்புப் பணிகளின் போது நான்கு நாட்களுக்குப் பிறகு ஒரு குடும்பத்தினர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். சூரல்மலாவின் படவெட்டிகுன்னுவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் காயங்களுடன் அவர்களது வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

குடும்பத்தில், தலா இரண்டு ஆண்களும் பெண்களும் இருப்பதாகவும், அதில் ஒரு பெண்ணின் காலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு பேர் உயிருடன் இருக்கும் இந்தச் செய்தி அப்பகுதி மக்களுக்கும், மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் ஆறுதலாக அமைந்துள்ளது.

படவெட்டிக்குன்னு சூரல்மலாவில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. நிலச்சரிவில் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட அந்தக் குடும்பத்தினரை மருத்துவ சிகிச்சைக்காக ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ராணுவம் ஏற்பாடு செய்துள்ளது. 

இது தொடர்பாக சூரல்மாலா வார்டு உறுப்பினர் நூருதீன் கூறுகையில், 

மீட்கப்பட்ட குடும்பம், அப்பகுதியில் தோட்டம் வைத்திருந்த ஜானியின் குடும்பம் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் தனது குடும்பத்துடன் வீட்டில் தங்கியிருந்தார். அப்பகுதியில் உள்ள மற்ற குடியிருப்பாளர்கள் அனைவரும் தற்போது முகாமில் உள்ளனர் என்று தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து