முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி கோவிலில் 2 கருட வாகன சேவை: வரும் 9,19-ம் தேதிகளில் நடக்கிறது

திங்கட்கிழமை, 5 ஆகஸ்ட் 2024      ஆன்மிகம்
Tirupati-2023-05-01

திருப்பதி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த மாதம் 2 நாட்கள் கருடசேவை நடக்கிறது. வருகிற 9-ம் தேதி கருட பஞ்சமி மற்றும் 19-ம் தேதி ஆவணி மாத பவுர்ணமி நாட்களில் கருட வாகனத்தில் எழுந்தருளி ஏழுமலையான் பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார்.

வரும் 9-ம் தேதி இரவு 7 மணி முதல் 9 மணி வரை தனது இஷ்ட வாகனமான கருடன் மீது திருமாட வீதிகளில் ஏழுமலையான் வலம் வந்து அருள் பாலிக்கிறார். இதில் புதுமண தம்பதிகள் கலந்து கொண்டு கருட பூஜை செய்தால் அவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதோடு கருடனை போல் வலிமையான மற்றும் நல்ல ஆளுமையுடன் இருக்கும் குழந்தை பிறக்கும் என்று நம்பப்படுகிறது.

அதை தொடர்ந்து வரும் 19-ம் தேதி ஆவணி மாத பவுர்ணமி முன்னிட்டு அன்று இரவு 7 மணி முதல் 9 மணி வரை கருட வாகனத்தில் சாமி வீதி உலா நடைபெறுகிறது. ஒரே மாதத்தில் 2 கருட வாகன சேவை நடைபெற உள்ளதால் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்யலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து