முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உண்மையான சாம்பியன் நீங்கள்: வீராங்கணை வினேஷ் போகத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

புதன்கிழமை, 7 ஆகஸ்ட் 2024      தமிழகம்
CM 2024-05-31

Source: provided

புதுடெல்லி : பதக்கத்தை தவறவிட்டாலும் வினேஷ் போகத் அபாரமான உறுதியால் அனைவரின் மனதையும் வென்றுள்ளார் என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத்து வகையிலும் உண்மையான சாம்பியன் நீங்கள் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி நாட்டிற்கு பெருமை சேர்த்த வினேஷ் போகத், தற்போது 100 கிராம் எடை கூடுதலாக இருக்கும் காரணத்தை சுட்டிக்காட்டி தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் மல்யுத்தத்தில் இந்தியாவிற்கான பதக்கம் தற்போது பறிபோயுள்ளது. இதனால் இந்திய ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பதக்கத்தை பறிகொடுத்த வினேஷ் போகத்துக்கு அனைவரும் தற்போது ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், வினேஷ் போகத்துக்கு ஆறுதல் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், வினேஷ் போகத் பதக்கத்தைத் தவறவிட்டாலும், அபாரமான உறுதியால் அனைவரின் மனதையும் வென்றுள்ளார் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

வினேஷ், நீங்கள் 'அனைத்து வகையிலும்' உண்மையான சாம்பியன். உங்கள் மீளும் திறன், வலிமை மற்றும் இறுதிப்போட்டியை நோக்கிய குறிப்பிடத்தக்க பயணம் மில்லியன்கணக்கான இந்திய மகள்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது. சில கிராம் எடையால் தகுதியிழந்தது, உங்கள் மனதையும், சாதனைகளையும் குறைத்து விடாது. நீங்கள் பதக்கத்தை தவறவிட்டாலும், உங்கள் அபாரமான உறுதியால் அனைவரின் மனதையும் வென்றுள்ளீர்கள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து