முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வசிப்பது குறைவு ஆனால்.... அமெரிக்காவில் உயரும் இந்தியர்களின் ஆதிக்கம்

திங்கட்கிழமை, 12 ஆகஸ்ட் 2024      உலகம்
America 2024 08 11

Source: provided

வாஷிங்டன் : சமீபகாலமாக அமெரிக்காவில் இந்தியர்களின் ஆதிக்கம் கணிசமாக அதிகரித்து வருவதாக ஒரு புள்ளி விவர அறிக்கை தெரிவிக்கிறது.

சான்பிரான்ஸிஸ்கோவில் உள்ள பிரபல 'இந்தியாஸ்போரா' என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவில் வாழும் இந்தியர்களின் பங்கு பல்வேறு துறைகளில் படுவேகமாக அதிகரித்து வருவதாகவும், இது மிக வியப்பான விஷயம் என்றும் தெரிவித்துள்ளது.

இந்தியர்கள் ஆதிகம் தொடர்பாக அந்த அமைப்பினர் நிறுவனர் எம்.ஆர். ரங்கசாமி கூறியிருப்பதாவது: அமெரிக்காவில் வாழும் மொத்த மக்கள் தொகையில் இந்தியர்கள் 1.5 சதவீதம் பேர் மட்டுமே உள்ளனர். ஆனால் இதில் இந்தியர்கள் பல லட்சம் பேர் அமெரிக்காவின் முக்கிய துறைகளில் தங்கள் பணி வாய்பை பெற்றுள்ளனர். 

வர்த்தகம், கல்வி, கலாசாரம், பொதுசேவை, உணவுதுறை, மாடலிங் என பல துறைகளில் ஜொலிக்கின்றனர். 500 கம்பெனிகளில் 16 நிறுவனங்கள் அமெரிக்க பொருளாதார வளர்ச்சியில் பல கோடி ஈட்டுவதாக உள்ளது. இந்நிறுவனங்கள் மூலம் பலருக்கு வேலை வாய்ப்பும் கிட்டுகிறது. அவர்களின் பங்களிப்பு மிகவும் பாராட்டுதலுக்குரியதாகவும், அமெரிக்கா சமூகத்தில் நல்ல முன்னேற்ற அடையாளமுமாகவே பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து