முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் முழுவதும் மாவட்டந்தோறும் கொடியேற்றி மரியாதை செலுத்திய கலெக்டர்கள்

வியாழக்கிழமை, 15 ஆகஸ்ட் 2024      தமிழகம்
Mayor-Priya-2024-08-15

சென்னை, இந்தியாவின் 78-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், தமிழகத்தில் மாவட்டந்தோறும் தேசியக் கொடியை ஏற்றி மாவட்டக் கலெக்டர்கள் மரியாதை செலுத்தினர். 

சுதந்திர தின விழா கொண்டாட்டத்தையொட்டி நேற்று காலை டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியேற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். இதைத்தொடர்ந்து சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் மேயர் பிரியா தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

அண்ணா விளையாட்டு அரங்கில் கடலூர் கலெக்டர் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். அரியலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட கலெக்டர் கொடியேற்றினார். கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேலு தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். கள்ளக்குறிச்சி கலெக்டர் பள்ளி மைதானத்தில் தேசியக்கொடி ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். நாமக்கல் கலெக்டர் உமா தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். கோவை கலெக்டர் கிராந்திகுமார் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். புதுக்கோட்டை கலெக்டர் அருணா ஆயுதப்படை மைதானத்தில் தேசியக்கொடி ஏற்றினார். திண்டுக்கல் கலெக்டர் பூங்கொடி தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். 

ராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். ராணிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் தேசியக்கொடி ஏற்றி வைத்து கலெக்டர் சந்திரகலா மரியாதை செலுத்தினார். தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் தேசியக்கொடி ஏற்றி வைத்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் பிரியா பங்கஜம் ஏற்றுக்கொண்டார். நாகை மாவட்ட விளையாட்டு அரங்கில் தேசியக்கொடி ஏற்றி வைத்த கலெக்டர் ஆகாஷ் காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் தேசியக்கொடி ஏற்றி வைத்த கலெக்டர் பிரதீப் குமார் காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து