எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிகாகோ, தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவை மேம்படுத்துதல், அதிநவீன தொழில்நுட்பத்தை வங்கி சேவைகளில் அறிமுகப்படுத்துவதற்கான திட்டம் குறித்து அமெரிக்காவின் பிஎன்ஓய் மேலன் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு, இந்த மூன்று ஆண்டுகளில் தொழில்துறையில் பல்வேறு சாதனைகளை புரிந்து வருவதோடு, முதலீடுகளை ஈர்ப்பதற்கு எடுத்து வைத்திடும் ஒவ்வொரு அடியும், வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் ஒரு பெரிய லட்சியத்தினைக் கொண்டதாகும் என்பதை உணர்ந்து செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் பல்வேறு முன்னெடுப்புகள், உலகளாவிய நிறுவனங்களின் கவனங்களை வெகுவாக ஈர்த்திருக்கும் காரணத்தால் தொழில் நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை மேற்கொள்ள தமிழ்நாட்டை நோக்கி வந்த வண்ணம் இருக்கின்றது.
தற்போது அதிவேகமாக வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள், மின்னணுவியல், புத்தாக்கம் மற்றும் புத்தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் சிறப்பான வளர்ச்சியைப் பெற பல்வேறு சீரிய திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. நாளைய தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப, தமிழ்நாட்டு இளைஞர்களின் திறன்களை வளர்த்திடும் வகையில் மாபெரும் திறன் மேம்பாட்டு திட்டமான ‘நான் முதல்வன்’ திட்டத்தை அரசு தொடங்கி இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது.
படித்த திறன்மிகு இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் நோக்கத்துடனும், மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை மேலும் மேம்படுத்துவதற்காகவும், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அமெரிக்காவில் அரசு முறை பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த பயணத்தின் போது, அமெரிக்க நாட்டின் சிகாகோவில், பிஎன்ஓய் மெலன் வங்கியின் உயர் அலுவலர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் சிகாகோவில் சந்தித்து தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார்.
சிகாகோவில் பிஎன்ஓய் மெலன் வங்கியின் உயர் அலுவலர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்சிகாகோவில் பிஎன்ஓய் மெலன் வங்கியின் உயர் அலுவலர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின். பிஎன்ஓய் மெலன் வங்கி உலகின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றாகும். இந்த வங்கி நிதி பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டதாகும். இந்த வங்கி சொத்து சேவை, கருவூல சேவை, முதலீடுகள் மேலாண்மை போன்ற சேவைகளை அமெரிக்க நாட்டின், நியூயார்க் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவருகிறது. இந்தியாவிலும் இந்த வங்கிக்கு பல கிளைகள் உள்ளன.
தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவை மேம்படுத்தவும், அதிநவீன தொழில்நுட்பத்தை வங்கி சேவைகளில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல்வரின் வழிகாட்டுதலோடு தமிழ்நாட்டு அரசுடன் இணைந்து வங்கி சேவைகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிறுவனம் பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றாகும். பிஎன்ஓய் மெலன் வங்கி தனது ஆறு முக்கிய மையங்களில் ஒன்றாக சென்னையை தேர்ந்தெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் அதிகளவு கணினி பொறியியல் படித்த மாணவர்கள் உள்ளதால் சென்னையில் சர்வதேச தரத்தில் பயிற்சி மையம் அமைத்திடவும், தரவுகளை பகுப்பாய்வு செய்வதற்கும், மென்பொருள் மேலாண்மை மற்றும் செயற்கை நுண்ணறிவை மேம்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்வின்போது, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, பிஎன்ஓய் மெலன் வங்கியின் துணைத் தலைவர் செந்தில் குமார், செயற்கை நுண்ணறிவு பிரிவு தலைவர் சர்தக் பட்நாயக், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் வி. அருண் ராய், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் வே.விஷ்ணு, அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
தே.மு.தி.க.வுடன் கூட்டணியா..? அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்
08 Feb 2026சென்னை, தே.மு.தி.க.வுடன் தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தையா என்ற தகவலுக்கு அமைச்சர் எ.வ.வேலு விளக்கமளித்துள்ளார்.
-
விசில் அடித்த த.வெ.க.வினர்: செங்கோட்டையன் கிண்டல்
08 Feb 2026ஈரோடு, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் த.வெ.க.
-
ஓ.பன்னீர் செல்வத்துடன் பேச மூன்ற மாத அவகாசம் உள்ளது: அண்ணாமலை பேட்டி
08 Feb 2026சிவகங்கை, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தனித்துவிடப்படவில்லை. எங்களுடன் தான் இருக்கிறார்.
-
வருகிற 13-ம் தேதி சேலத்தில் நடைபெறும் விஜய் பிரச்சார கூட்டத்திற்கு அனுமதி
08 Feb 2026சேலம், சேலத்தில் வரும் 13-ம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பங்கேற்கும் பிரச்சாரக் கூட்டத்துக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் சேலம் மாநகர காவல் துறை அனுமதி வழங்கியுள்
-
தேர்தலில் தி.மு.க.வுடன்தான் காங்கிரஸ் கட்சி பயணிக்கும்: மதுரையில் செல்வப்பெருந்தகை பேட்டி
08 Feb 2026மதுரை, காங்கிரஸ் கட்சி வருகிற தேர்தலில் தி.மு.க.வுடன் தான் பயணிக்கும்.
-
திருமண நிகழ்ச்சி ஒன்றில் ஆந்திரா முன்னாள் முதல்வரை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்
08 Feb 2026சென்னை, சென்னையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் ஆந்திரா முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
-
சட்டசபை தேர்தலில் தி.மு.க.விடம் அதிக தொகுதிகளை கேட்போம்: திருமா திட்டவட்டம்
08 Feb 2026சென்னை, இந்த முறை சட்டசபை தேர்தலில் நாங்கள் கூடுதலான இடங்களில் போட்டியிட விரும்புகிறோம்.
-
எப்ஸ்டீனை சந்தித்தேனா? தலாய் லாமா விளக்கம்
08 Feb 2026லகாசா, எப்ஸ்டீன் ஃபைல்ஸ் விவகாரத்தில், தனது பெயரை தொடர்புப்படுத்தி வெளியாகும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என திபெத்திய மதகுரு தலாய் லாமா மறுத்துள்ளார்.&nbs
-
குரூப்-2, 2ஏ தேர்வுகள் திடீர் ரத்து: தேர்வர்கள் மறியலால் பரபரப்பு
08 Feb 2026சென்னை, டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டதால் சென்னை பூந்தமல்லியில் ஞாயிற்றுக்கிழமை தேர்வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
அரசியல் களத்தில் த.வெ.க.வுக்கு ஒரே எதிரி தி.மு.க. மட்டும் தான்: செங்கோட்டையன் பேட்டி
08 Feb 2026ஈரோடு, தமிழ்நாடு அரசியல் களத்தில் த.வெ.க.வுக்கு எதிரி தி.மு.க.தான். அ.தி.மு.க. ஒரு கட்சியே அல்ல என்று த.வெ.க. தலைமை நிர்வாகி செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –08-02-2026
08 Feb 2026 -
மலேசியாவில் பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆரின் பாடல்
08 Feb 2026கோலாலம்பூர், மலேசியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்த நாட்டின் பிரதமர் அன்வர் இப்ராஹிம் அளித்த விருந்து நிகழ்ச்சியில், நடிகர் எம்.ஜி.ஆரின் ’நாளை நமதே’ பாடல் பா
-
மத்திய அரசின் ஒருங்கிணைந்த நடவடிக்கையால் அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் சாத்தியமாகியுள்ளது: மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் பெருமிதம்
08 Feb 2026புதுடில்லி, மத்திய அரசின் ஒருங்கிணைந்த நடவடிக்கையால் அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் சாத்தியமாகியுள்ளது என்றும், இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் நமது வ
-
பிரதமர் மோடியுடனான சந்திப்பு இருநாட்டு உறவுகளுக்கு முக்கியம்: மலேசியா பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்
08 Feb 2026கோலாலம்பூர், பிரதமர் மோடியுடனான சந்திப்பு இருநாட்டு உறவுகளுக்கு மிகவும் முக்கியமானது என மலேசியா பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
08 Feb 2026- இராமேஸ்வரம் சுவாமி வெள்ளி கற்பக விருட்ச வாகனம், அம்பாள் வெள்ளி காமதேனு வாகனம்.
- வைத்தீசுவரன் செல்வமுத்து குமாரசுவாமி புறப்பாடு.
- திருமயம் ஆண்டாள் பவனி.
- இராமநாதபுரம் செட்ட
-
இன்றைய நாள் எப்படி?
08 Feb 2026 -
இன்றைய ராசிபலன்
08 Feb 2026


