முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐதராபாத் விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரி மீது தாக்குதல் : வில்லன் நடிகர் விநாயகன் கைது

ஞாயிற்றுக்கிழமை, 8 செப்டம்பர் 2024      சினிமா
Vinayakan 2024-09-08

Source: provided

திருவனந்தபுரம் : ஐதராபாத் விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரியை தாக்கிய சம்பவம் தொடர்பாக பிரபல வில்லன் நடிகர் விநாயகனை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 மலையாள சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் தொடங்கி தற்போது வில்லன், நாயகன் என முக்கிய வேடங்களில் நடித்து வருபவர் விநாயகன். தொட்டப்பன் உள்பட சில படங்களில் நாயகனாகவும் நடித்துள்ளார். இந்தப் படத்தில் நடித்ததற்காக இவருக்கு கேரள அரசின் சிறந்த நடிகருக்கான விருதும் கிடைத்துள்ளது. 

தமிழில் திமிரு, எல்லாம் அவன் செயல், சிலம்பாட்டம், மதுரை சம்பவம், சிறுத்தை உள்பட பல படங்களில் இவர் வில்லனாக நடித்துள்ளார். மலையாளம், தமிழ் தவிர இந்தி மற்றும் தெலுங்கிலும் இவர் நடித்துள்ளார். அடிக்கடி ஏதாவது சர்ச்சையான கருத்துக்களை பேசுவதும், குடிபோதையில் பொது இடங்களில் ரகளை செய்வதும் இவரது வழக்கமாகும்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் சொத்து பிரச்னை தொடர்பாக உறவினர் ஒருவரை தாக்கியதாக இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மரணமடைந்த போது அவர் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக விநாயகன் மீது புகார் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து கொச்சியிலுள்ள அவரது வீட்டின் மீது காங்கிரசார் தாக்குதல் நடத்தினர். 

இந்நிலையில் நடிகர் விநாயகன் நேற்று முன்தினம் கொச்சியிலிருந்து ஐதராபாத் வழியாக கோவாவுக்கு விமானத்தில் சென்றார். ஐதராபாத் விமான நிலையத்தில் இவரிடம் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்த முயன்றனர். ஆனால் விநாயகன் சோதனைக்கு உடன்படவில்லை.

இதனால் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும், அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. திடீரென பாதுகாப்பு அதிகாரியை விநாயகன் கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. 

இதைத் தொடர்ந்து பாதுகாப்பு அதிகாரிகள் விநாயகனை கைது செய்து ஐதராபாத் விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து