முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் 13-ம் தேதி பா.ஜ.க. மையக்குழு கூட்டம்: உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த ஏற்பாடு:

செவ்வாய்க்கிழமை, 10 செப்டம்பர் 2024      தமிழகம்
BJP 2023 04 10

சென்னை, உறுப்பினர் சேர்க்கையை தீவிரமாக்குவது தொடர்பாக ஆலோசிக்க பா.ஜ.க. மையக்குழு கூட்டம் சென்னையில் வருகிற 13-ம் தேதி நடக்கிறது.

நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கை கடந்த 2-ம் தேதி தொடங்கியது. தமிழகத்திலும்  உறுப்பினர் சேர்க்கை தொடங்கி நடந்து வருகிறது.ஒரு பூத்துக்கு 150 முதல் 200 பேர் வீதம் ஒரு கோடி பேரை உறுப்பினர்களாக சேர்க்க திட்டமிட்டுள்ளார்கள். ஆனால் அந்த இலக்கை அடையும் அளவுக்கு உறுப்பினர் சேர்க்கையில் விறுவிறுப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக கடந்த 6-ம் தேதி காணொலி வாயிலாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் இதுவரை 2 லட்சத்துக்கும் குறைவானவர்களே உறுப்பினர்களாக சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு அமைப்பு செயலாளர் பி.எல். சந்தோஷ் அதிருப்தி தெரிவித்துள்ளார். இந்த மாத இறுதிக்குள் 50 லட்சம் பேரை உறுப்பினர்களாக சேர்த்து இருக்க வேண்டும். அடுத்த மாதம் (அக்டோபர்) முதல் வாரத்தில் குறித்த இலக்கை அடைய வேண்டும் என்றும் அப்போது உத்தரவிட்டிருந்ததாக கூறப்படுகிறது.

உறுப்பினர் சேர்க்கையை தீவிரமாக்குவது தொடர்பாக ஆலோசிக்க பா.ஜ.க. மையக்குழு கூட்டம் சென்னையில் வருகிற 13-ம் தேதி நடக்கிறது.மாநில ஒருங்கிணைப்பாளர் எச். ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், வி.பி.துரைசாமி, கரு.நாகராஜன், கருப்பு முருகானந்தம், கார்த்தியாயினி உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்தில் மாவட்ட வாரியாக சேர்க்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் எண்ணிக்கை பற்றி விவாதிக்கப்படுகிறது. மேலும் உறுப்பினர்கள் குறைவாக சேர்ந்திருப்பதால் அதற்கான காரணம் பற்றியும் விவாதிக்கப்படுகிறது.   அக்டோபர் 15-ம் தேதிக்குள் 75 லட்சம் உறுப்பினர்களை சேர்த்தாக வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து