முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வலியுறுத்துவது ஏன்? அமெரிக்காவில் ராகுல் விளக்கம்

செவ்வாய்க்கிழமை, 10 செப்டம்பர் 2024      உலகம்
Rahul 2024-09-10

வாஷிங்டன், இந்தியாவின் முக்கிய நிறுவன அமைப்பில் - பொருளாதாரம், அரசு நிர்வாகம், கல்வி ஆகிய நிறுவன அமைப்புகளில், நம் நாட்டின் மக்கள்தொகையில் 90 சதவிகிதத்தினருக்கு அர்த்தமுள்ள விகிதத்தில் பிரதிநிதித்துவம் இருக்கிறதா என்கிற முக்கிய கேள்விக்கு விடை தெரிய வேண்டும். இதற்கு ஜாதிவாரிக் கணக்கெடுப்பு வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, அங்கு பல தரப்பு மக்களுடன் கலந்துரையாடி வருகிறார். இந்த நிலையில், அமெரிக்க சுற்றுப் பயணத்தின்போது ராகுல் காந்தி இந்தியாவுக்கு எதிரான கருத்து தெரிவித்திருப்பதாக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

ஜாதிவாரிக் கணக்கெடுப்பை தவிர்க்க முடியாது என அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி வலியுறுத்திக் கூறியுள்ளார். இந்த நிலையில், ஜாதிவாரிக் கணக்கெடுப்பை தொடர்ந்து வலியுறுத்தி வரும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வாஷிங்டன் டிசியில் உள்ள ஜார்ஜ்டவுண் பல்கலைக்கழகத்தில் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, “ஜாதிவாரிக் கணக்கெடுப்பு இப்போது தடுத்து நிறுத்த முடியாத விஷயமாக மாறியுள்ளது.

இந்தியாவின் முக்கிய நிறுவன அமைப்பில் - பொருளாதாரம், அரசு நிர்வாகம், கல்வி ஆகிய நிறுவன அமைப்புகளில், நம் நாட்டின் மக்கள்தொகையில் 90 சதவிகிதத்தினருக்கு அர்த்தமுள்ள விகிதத்தில் பிரதிநிதித்துவம் இருக்கிறதா என்கிற முக்கிய கேள்விக்கு விடை தெரிய வேண்டும். இதற்கு ஜாதிவாரிக் கணக்கெடுப்பு வேண்டும்.

ஜாதிவாரிக் கணக்கெடுப்பு விவகாரம், நீதி மற்றும் நியாயம் தொடர்பான விவகாரம். பொருளாதார கணக்கெடுப்பு, நிறுவன அமைப்புகளில் மேற்கொள்ள வேண்டிய கணக்கெடுப்புடன், விரிவான ஜாதி வாரிக் கணக்கெடுப்பும் நடத்த வேண்டும். மாறாக வேறு எவ்வித கணக்கெடுப்புகளையும் ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து