முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்: சென்னையில் வரும் 24-ம் தேதி அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்: எடப்பாடி அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 13 செப்டம்பர் 2024      தமிழகம்
Edappadi 2020 11-16

சென்னை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்கத் தவறிய  தி.மு.க. அரசைக் கண்டித்து வரும் 24-ம் தேதி சென்னையில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக அக்கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முதல்வர்  மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து, தமிழகத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருவதை அனைவரும் அறிவோம்.  சமூக விரோத சக்திகளைக் கட்டுப்படுத்த தவறிய இந்த தி.மு.க. ஆட்சியில், தமிழக மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.  6 வயது சிறுமி முதல் 60 வயதைக் கடந்த பெண்கள் வரை, யாருக்குமே பாதுகாப்பில்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 40 மாத கால திராவிட மாடல் ஆட்சியில் அதிகரித்து வரும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்கத் தவறிய  தி.மு.க. அரசைக் கண்டித்து, அ.தி.மு.க. மகளிர் அணி மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில் வரும் 24-ம் தேதி செவ்வாய்க் கிழமை காலை 9.30 மணியளவில், சென்னை மாநகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்,  முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி  தலைமையிலும்,  முன்னாள் அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா முன்னிலையிலும் நடைபெறும். 

 இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், அ.தி.மு.க. மகளிர் அணியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், இளம்பெண்கள் பாசறையைச் சேர்ந்த நிர்வாகிகளும், மகளிரும் பெருந்திரளாகக் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து