எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, தமிழக காங்கிரஸ் மாநில செயற்குழு கூட்டம் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக காங்கிரஸ் மாநில செயற்குழு கூட்டம் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக பொறுப்பாளர் டாக்டர் அஜோய்குமார், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சூரஜ் ஹெக்டே மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், பிரதமர் மோடி தலைமயில் மத்திய அரசு அமைந்தது முதற்கொண்டு அதிகாரங்களை குவித்து தலைநகர் டெல்லியில் அமர்ந்து கொண்டு இந்தியாவை ஆள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதன் பின்னணியில் எடுத்தது தான் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த அமைச்சரவையின் முடிவாகும்.
கடந்த 75 ஆண்டுகளாக நாடாளுமன்ற ஜனநாயகம் செழுமைப்படுகிற வகையில் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. அமைதியான முறையில் ஆட்சி மாற்றமும் நிகழ்ந்து வருகிறது. வேற்றுமையில் ஒற்றுமை கண்டு மத நல்லிணக்கத்தோடு அரசமைப்புச் சட்டப்படி செயல்படுவதற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அறிமுகம் செய்திருப்பதை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.
தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை கொண்டு வர தொடர்ந்து முயற்சிப்பது, புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று மத்திய கல்வி அமைச்சகம் கூறுவது கூட்டாட்சி தத்துவத்தை சிதைப்பதாகும். மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-10-2025.
21 Oct 2025