முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகளாவிய இந்திய அழகிகள் போட்டி: மிஸ் இந்தியாவாக ஐ.டி. மாணவி தேர்வு

வெள்ளிக்கிழமை, 20 செப்டம்பர் 2024      உலகம்
Miss-India 2024-03-20

Source: provided

நியூயார்க் : உலகளாவிய இந்திய அழகிகள் பங்கேற்ற அழகிகள் போட்டியில் மிஸ் இந்தியாவாக ஐ.டி. மாணவி த்ருவி பட்டேல் தேர்வு செய்யப்பட்டார்.

நியூஜெர்ஸியில் உலகளாவிய மிஸ் இந்தியா-2024 அழகிகள் போட்டி நடந்தது. உலகம் முழுவதும் வாழும் இந்திய அழகிகள் பலர் பங்கேற்றனர். நியூயார்க்கில் உள்ள இந்தியன் திருவிழா கமிட்டியினர் இந்த போட்டியை நடத்தினர். இந்த அமைப்பினர் கடந்த 30 ஆண்டுகளாக இந்த போட்டியை நடத்தி வருகின்றனர்.

குஜராத்தை சேர்ந்த த்ருவி, அமெரிக்காவில் பல ஆண்டுகளாக வசித்து வருகிறார். தகவல் தொழில்நுட்ப படிப்பை மேற்கொண்டுள்ள அவர், அழகிகள் போட்டியில் வெற்றி பெற்றார். 

இது குறித்து த்ருவி கூறுகையில், நான் வெற்றி பெற்றது மிக பெரிய ஆச்சரியமாகவும், பெரும் கிரீடம் கிடைத்திருப்பதாகவும் உணர்கிறேன். பாலிவுட் நடிகையாக வேண்டும் என்பதே எனது இலக்கு.  ஐ.நா., கலாசார மைய தூதராக வேண்டும் என்று தெரிவித்தார். 

அமெரிக்காவின் ஸ்ரிநேம் என்ற பகுதியை சேர்ந்த லிசா அப்டோல் ஹக் இரண்டாவதாகவும், நெதர்லாந்தை சேர்ந்த மாளவியா ஷர்மா மூன்றாவதாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து