எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுடில்லி : கூகுளின் ஏ.ஐ., செயலியான ஜெமினி தற்போது ஹிந்தி மொழியில் போதுமான தகவல்களை வழங்கி வருகிறது. இன்னும் சில வாரங்களில் தமிழ், மராத்தி, பெங்காலி உள்ளிட்ட 8 மொழிகளிலும் தயார் செய்யப்பட்டு விடும் என்றும் கூகுள் பிளே மூலம் இந்திய டெவலப்பர்கள் ஆண்டுக்கு ரூ.4,000 கோடி வரை சம்பாதிக்கின்றனர் என்றும் கூகுள் நிறுவனத்தின் இந்திய நிர்வாகி ரோமா தத்தா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கூகுளின் 10வது பதிப்பு தொடர்பான நிகழ்ச்சியில், நாட்டின் வளர்ச்சியில் ஏ.ஐ., தொழில்நுட்பத்தின் பங்களிப்பு குறித்து கூகுள் இந்திய தலைமை அதிகாரி ரோமா தத்தா சோபே பேசியதாவது: ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் மீதே எங்கள் நிறுவனத்தின் மொத்த கவனமும் இருக்கிறது. இதன் மூலம் இந்தியாவில் பொருளாதாரம் மற்றும் சமூக நலன் சார்ந்தபிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும்.
மேலும் விவசாயம் மற்றும் சுகாதாரம் உள்ளிட்டவைகளின் வளர்ச்சி குறித்தும் கூகுள் கவனம் செலுத்தி வருகிறது. இந்தியா உள்ளிட்ட நாடுகளின் வளர்ச்சியில் ஏ.ஐ., பெரும் பங்கு வகிக்கும். இளம் சிறுவர்கள் ஏ.ஐ., குறித்த திறனை வளர்த்து கொள்வதற்காக 4 மில்லியன் அமெரிக்க டாலர்களை கூகுள் நிறுவனம் ஏற்கனவே ஒதுக்கியுள்ளது. தற்போது, ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் ஒரு கோடி இந்தியர்களுக்கு ஏ.ஐ., திறன் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கூகுளின் ஏ.ஐ., செயலியான ஜெமினி தற்போது ஹிந்தி மொழியில் போதுமான தகவல்களை வழங்கி வருகிறது. இன்னும் சில வாரங்களில் தமிழ், மராத்தி, பெங்காலி உள்ளிட்ட 8 மொழிகளிலும் தயார் செய்யப்பட்டு விடும். செயலிகளுக்கான வருவாயை குறைத்த கூகுளின் முடிவுக்கு இந்திய டெவலப்பர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக தொடர்ந்து பேச்சுக்கள் நடந்து வருகின்றன. கூகுள் பிளே மூலம் இந்திய டெவலப்பர்கள் ஆண்டுக்கு ரூ.4,000 கோடிக்கு மேல் சம்பாதிக்கின்றனர், எனக் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |