முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கான் கிரிக்கெட் வீரர் ரஷித்கானுக்கு திருமணம்

வெள்ளிக்கிழமை, 4 அக்டோபர் 2024      விளையாட்டு
Rashid-Khan 2024-10-04

Source: provided

காபூல் : ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கானுக்கு திருமணம் நடைபெற்றது.

நட்சத்திர வீரர்...

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கானுக்கு நேற்று முன்தினம் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமண விழாவில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் பலர் நேரில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பான வீடியோ மற்றும் படங்கள் வைரலாகி வருகின்றன.

தலைநகர் காபூலில்...

ரஷித் கான் திருமணம் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஓட்டலில் நடந்துள்ளது. ஆப்கானிஸ்தான் அணியின் முன்னணி வீரரான முகமது நபி ஒரேயொரு கிங் கான் ஆன ரஷித் கானுக்கு திருமண வாழ்த்துக்கள். வாழ்நாள் முழுவதும் அன்பு, மகிழ்ச்சி நிறைந்திருக்க வாழ்த்துகள் என சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

2015-ம் அறிமுகம்...

26 வயதாகும் ரஷித் கான் ஐந்து டெஸ்ட், 105 ஒருநாள் மற்றும் 93 டி20 போட்டிகளில் விளையாடிள்ளார். டெஸ்ட் போட்டியில் 34 விக்கெட்டுகளும், ஒருநாள் போட்டியில் 190 விக்கெட்டுகளும், டி20 போட்டியில் 152 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். 2015-ம் ஆண்டு முதன்முறையாக ஜிம்பாப்வே அணிக்கெதிராக டி20 போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து