முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலியல் பலாத்கார வழக்கு: நடிகர் சித்திக்கிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை

திங்கட்கிழமை, 7 அக்டோபர் 2024      சினிமா
Siddique 2024-03-30

Source: provided

திருவனந்தபுரம் : பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பாக  சிறப்பு புலனாய்வு குழு முன் ஆஜரான நடிகர் சித்திக்கிடம் நேற்று விசாரணை நடத்தப்பட்டது.

கேரள திரையுலகில் நடிகைகள் உள்பட பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக விசாரித்த ஹேமா கமிட்டி அறிக்கையில் சில பகுதிகளை கேரள அரசு வெளியிட்டது. இந்நிலையில், கேரள ஐகோர்ட்டு உத்தரவின்படி, ஹேமா கமிட்டியின் முழு அறிக்கை கடந்த ஆகஸ்டு இறுதியில் வெளியிடப்பட்டது. பின்னர் ஐகோர்ட்டு கூறியதன்படி, அதனை சிறப்பு புலனாய்வு குழுவிடம் கேரள அரசு ஒப்படைத்து உள்ளது.

ஹேமா கமிட்டியிடம் நடிகைகள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் வாக்குமூலம் அளித்துள்ளனர். இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இளம் நடிகை அளித்த புகாரின் அடிப்படையில், மூத்த நடிகர் சித்திக்கிற்கு எதிராக கேரளாவின் திருவனந்தபுரம் நகரில் உள்ள மியூசியம் போலீசார் கடந்த ஆகஸ்டு 27-ந்தேதி வழக்கு பதிவு செய்தனர். பாலியல் பலாத்காரம் மற்றும் குற்ற நோக்குடன் அச்சுறுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு பதிவானது.

இந்த வழக்கில் சித்திக்கிற்கு எதிராக கேரள போலீசார் லுக்அவுட் நோட்டீஸ் ஒன்றை பிறப்பித்தனர். இதனால், போலீசார் அவரை தொடர்ந்து தேடி வந்தனர். இந்த சூழலில், ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ஒரு பொய்யான மற்றும் போலி வழக்கில் தவறாக சேர்க்கப்பட்டு உள்ளேன் என சித்திக் தெரிவித்து உள்ளார்.

இந்த வழக்கு, சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதிகள் பெலா எம். திரிவேதி மற்றும் சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் சித்திக் கைது செய்யப்படுவதில் இருந்து அவருக்கு இடைக்கால பாதுகாப்பு அளித்து கடந்த செப்டம்பர் 30-ந்தேதி உத்தரவு பிறப்பித்தது. இதனால், சித்திக்கை போலீசார் கைது செய்வதில் தடை ஏற்பட்டது.

இந்நிலையில், ஐ.பி.எஸ். அதிகாரி தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு, சித்திக்கிடம் நேற்று விசாரணை மேற்கொண்டது. சித்திக் மீது இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவுகள் 376 (கற்பழிப்பு) மற்றும் 506 (குற்ற உள்நோக்கம்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவாகி உள்ளது. எனினும், 2019-ம் ஆண்டு முதல் பொய்யான குற்றச்சாட்டுகளின் பேரில் நடிகை தன்னை துன்புறுத்தி வருகிறார் என சித்திக் கூறியுள்ளார். கேரளாவில் பாலியல் துன்புறுத்தல் தொடர்புடைய வழக்கில், ஏற்கனவே நடிகர்கள் முகேஷ், இடவேள பாபு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, பின்னர் முன்ஜாமீன் பெற்றதன் அடிப்படையில் உடனடியாக விடுதலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து