முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.60 ஆயிரத்தை நெருங்கும் ஒரு பவுன் தங்கத்தின் விலை

புதன்கிழமை, 30 அக்டோபர் 2024      வர்த்தகம்
gold 2023 01 26

சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்துள்ளது.

தங்கத்தின் விலை கடந்த வார இறுதியில் ரூ. 58,880-க்கு விற்பனை செய்த நிலையில், வாரத்தின் தொடக்க நாளான நேற்று முன்தினம் மேலும் உயர்ந்தது. இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்னும் விலை உயர்ந்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, புதன்கிழமையான நேற்று காலை அதிரடியாக சவரனுக்கு ரூ. 520 அதிகரித்துள்ளது.

சென்னையில் புதன்கிழமை காலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ. 59,520-க்கும், ஒரு கிராம் ரூ. 7,440-க்கும் விற்பனையானது. அதேபோல், 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ. 63,560-க்கும், ஒரு கிராம் ரூ. 7,945-க்கும் விற்பனையானது.

நேற்று சென்னையில் காலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ. 59,000-க்கும், ஒரு கிராம் ரூ. 7,375-க்கும் விற்பனையானது. அதேபோல், 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ. 63,040-க்கும், ஒரு கிராம் ரூ. 7,880-க்கும் விற்பனையானது.  இந்த நிலையில், தங்கத்துக்கு போட்டிபோட்டுக் கொண்டு வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ஒரு ரூபாய் அதிகரித்து, ரூ. 109-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ கட்டி வெள்ளி விலை ரூ. 1,09,000-க்கு விற்பனையானது. கடந்த அக். 23-ஆம் தேதி வெள்ளியின் விலை தொடர்ந்து உயர்ந்துவருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து