முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நியூசிலாந்துக்கு எதிரான தோல்வி: கேப்டன் ரோகித் சர்மா விளக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 3 நவம்பர் 2024      விளையாட்டு
3-Ram-52

Source: provided

மும்பை: நியூசிலாந்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றி இந்தியாவை சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்துள்ளது. தோல்விக்கான காரணம் குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா விளக்கமளித்துள்ளார்.

கடைசி டெஸ்ட்... 

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்திற்கான டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் பேட்டிங் தேர்வு செய்தார். பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 59.4 ஓவர்களில் 263 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக சுப்மன் கில் 90 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக அஜாஸ் படேல் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

147 ரன்கள் இலக்கு...

இதனையடுத்து 28 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து 174 ரன்களில் ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக வில் யங் 51 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் அபாரமாக பந்துவீசிய ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் இந்திய அணிக்கு 147 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இலக்கை நோக்கி... 

147 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு, நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளரான அஜாஸ் படேல் கடும் நெருக்கடி கொடுத்தார். ஆட்ட முடிவில் இந்தியா 2-வது இன்னிங்சில் 121 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நியூசிலாந்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றி இந்தியாவை சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்துள்ளது. நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக அஜாஸ் படேல் 6 விக்கெட்டுகளை அள்ளினார்.

ஜீரணிக்க முடியாத... 

இந்த நிலையில்,நியூசிலாந்துக்கு எதிரான தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது, ஒரு தொடரை இழப்பது, டெஸ்டில் தோல்வியடைவது எளிதல்ல, அது எளிதில் ஜீரணிக்க முடியாத ஒன்று. நாங்கள் எங்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாடவில்லை, இதை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். நியூசிலாந்து வீரர்கள் தொடர் முழுவதும் எங்களை விட மிகவும் சிறப்பாக செயல்பட்டனர். நாங்கள் நிறைய தவறுகளை செய்துள்ளோம், அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். முதல் இன்னிங்சில் நாங்கள் போதுமான ரன்களை எடுக்கவில்லை. நாங்கள் கூட்டாக சிறப்பாக செயல்படாததே இந்த தோல்விகளுக்கு காரணம்.என தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து