Idhayam Matrimony

நிக்கி ஹாலேவுக்கு அரசில் இடமில்லை: டிரம்ப் உறுதி

ஞாயிற்றுக்கிழமை, 10 நவம்பர் 2024      உலகம்
Nicky-Trump 2024-11-10

Source: provided

வாஷிங்டன் :  அமெரிக்காவில் அடுத்து அமையும் அரசில் இடம்பெற, ஐ.நா. விற்கான முன்னாள் தூதர் நிக்கி ஹாலே மற்றும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோவை அழைக்கவில்லை என அதிபராக தேர்வாகி உள்ள டிரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் களமிறங்கிய டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்று மீண்டும் அதிபராக பதவியேற்க உள்ளார். இதற்காக அதிகார மாற்றத்திற்கான பணிகள் நடந்து வருகின்றன. 

இதனிடையே, புதிய அரசில் யாருக்கு வாய்ப்பு அளிப்பது குறித்து, டிரம்ப் ஆலோசனை நடத்தி வருகிறார். நிக்கி ஹாலேவும், மைக் பாம்பியோவும் புதிய அரசில் இடம்பெறுவார்கள் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இது தொடர்பாக டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 

எனது நிர்வாகத்தில் இடம்பெற வேண்டும் என நிக்கி ஹாலே மற்றும் மைக் பாம்பியோவை அழைக்க மாட்டேன். முந்தைய அரசில் அவர்களுடன் இணைந்து பணியாற்றியதை மறக்க முடியாது. நாட்டிற்காக அவர்கள் ஆற்றிய பணிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் டிரம்ப் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து