முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கத்திக்குத்து சம்பவத்தில் காயமடைந்த மருத்துவரின் குடும்பத்தினரை சந்தித்து துணை முதல்வர் உதயநிதி ஆறுதல்

புதன்கிழமை, 13 நவம்பர் 2024      தமிழகம்
udhayanidhi-stalin-2024-11-

சென்னை, சென்னையில் டாக்டர் கத்தியால் குத்தப்பட்ட விவகாரத்தில், முதல்வர் மு.க. ஸ்டாலின் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அவருடைய குடும்பத்தினரிடமும், டாக்டர்களிடமும் தெரிவித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மருத்துவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் நோயாளியின் உறவினர் ஒருவரால் தாக்கப்பட்டதால், அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை டாக்டர் பாலாஜியை, தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று நேரில் சந்தித்து, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இந்த விவகாரத்தில், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அவருடைய குடும்பத்தினரிடமும், டாக்டர்களிடமும் தெரிவித்தார்.

இதன்பின் அவர், செய்தியாளர்களிடம் பேசும்போது, கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் பணியாற்றி வருகின்ற டாக்டர் பாலாஜி ஜெகந்நாதன் என்பவரை பெருங்களத்தூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் கத்தியால் தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்து தற்போது தீவிர அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். கடந்த மே மாதம் முதல் அந்த இளைஞருடைய தாயார் இந்த மருத்துவனையில் புற்றுநோய் பிரச்சனைக்காக இதே டாக்டரிடம் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். பின்னர் வேறு ஒரு தனியார் மருத்துவனைக்கு அவர் அழைத்து செல்லப்பட்டிருக்கிறார். அவரது தாயாருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் பக்கவிளைவுகள் ஏற்பட்டது குறித்து, டாக்டர் பாலாஜி ஜெகந்நாதனை அந்த இளைஞர் ஏற்கனவே சந்தித்து கேட்டுள்ளார் என்றும் தெரிகின்றது.

இந்த நிலையில், நேற்று மருத்துவமனைக்கு வந்த அந்த இளைஞர், டாக்டர் பாலாஜி ஜெகந்நாதனை கத்தியால் குத்தியிருக்கின்றார். இப்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் கண்காணிப்பில் இருக்கிறார். தற்போது டாக்டர் பாலாஜியின் உடல்நலம் சீராக உள்ளது. இன்னும் இரண்டு, மூன்று மணி நேரத்திற்குள் சுயநினைவுக்கு வந்துவிடுவார். மேலும் இந்த சம்பவம் குறித்து முழு விசாரணை மேற்கொள்ளப்படும். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அந்த இளைஞர் காவல் துறையினரால் உடனடியாக கைது செய்யப்பட்டிருக்கிறார். இது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்க ஒரு செயல். இந்த செயலில் ஈடுபட்ட இளைஞர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தொடர்ந்து அவர் பேசும்போது, தமிழகத்தில் உள்ள அரசு டாக்டர்கள் அனைவர் மீதும் அக்கறை கொண்டது முதல்வரின் அரசு. அவர்களுக்கு தேவையான உரிய பாதுகாப்பினை கண்டிப்பாக, உறுதியாக வழங்க வேண்டும் என்று நமது முதல்வர் தெளிவாக இருக்கின்றார். கண்டிப்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து