முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்தியடையாத ஆத்மாக்களின் கடல்: அரசியல் குறித்து கட்கரி கருத்து

திங்கட்கிழமை, 2 டிசம்பர் 2024      இந்தியா
Katkari 2024-12-02

Source: provided

 

மும்பை: அரசியல் என்பது எதிலும் திருப்தியடையாத ஆத்மாக்களின் கடல் என நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க. மூத்த தலைவரான நிதின் கட்கரி மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சராகப் பதவியில் உள்ளவர். ஞாயிற்றுக்கிழமை நாக்பூரில் நடந்த '50 கோல்டன் ரூல்ஸ் ஆஃப் லைஃப்' என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அவர் இவ்வாறு பேசியுள்ளார். மேடையில் அவர் பேசியதாவது, 

ஒரு நபர் குடும்பம், சமூகம், அரசியல் அல்லது கார்ப்பரேட் வாழ்க்கையில் இருந்தாலும், வாழ்க்கை சவால்கள் மற்றும் சிக்கல்கள் நிறைந்ததாக இருந்தாலும், அவற்றை எதிர்கொள்ளும் "வாழும் கலையை" அந்த நபர் புரிந்து கொள்ள வேண்டும் என்று பேசினார்.

அதற்கு உதாரணம் கூறிய அவர், அரசியல் என்பது திருப்தியற்ற ஆத்மாக்களின் கடல், அங்கு ஒவ்வொருவரும் சோகமாக இருக்கிறார்கள்.. உறுப்பினராக வருபவர் தனக்கு எம்எல்ஏ ஆக வாய்ப்பு கிடைக்காததால் வருத்தப்படுகிறார். அமைச்சர் பதவி கிடைக்காததால், எம்.எல்.ஏ., வருத்தத்தில் உள்ளார். அமைச்சர் ஆனவர், அமைச்சரவையில் நல்ல துறை கிடைக்காமலும், முதல்வராக முடியாமலும் தவிக்கிறார்.

முதல்வரோ, எப்பொழுது மேலிடம் பதவியை விட்டு போக சொல்லுமோ என்று தெரியாமல் டென்ஷனில் இருக்கிறார் என்று அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக பிரதமர் மோடியின் பதவிக்கு ஆர்எஸ்எஸ் செல்வாக்கு அதிகம் உள்ள நிதின் கட்கரி காய் நகர்த்தி வருவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து