முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பூடான் மன்னர் இன்று இந்தியா வருகை

புதன்கிழமை, 4 டிசம்பர் 2024      இந்தியா
Bhutan 2024-12-04

Source: provided

புதுடெல்லி : இரண்டு நாள் பயணமாக பூடான் மன்னர் இன்று இந்தியா வருகிறார்.

இந்தியா-பூடான் இடையே நெருங்கிய நட்புறவு நீடித்து வருகிறது. இந்த நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியால் வாங்சுக், இரண்டு நாள் பயணமாக இன்று (வியாழக்கிழமை) இந்தியா வருகிறார். இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி வருமாறு:-

பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியால் வாங்சுக், ராணி ஜெட்சன் பெமா வாங்சுக் மற்றும் பூடான் அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகள் இன்று இந்தியா வருகிறார்கள். இந்த பயணத்தின்போது, பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஆகியோரை பூடான் மன்னர் சந்தித்து பேச உள்ளார்.

இந்தியாவும் பூடானும் பரஸ்பர புரிதல் மற்றும் நம்பிக்கையுடன் கூடிய நெருங்கிய நட்பு நாடுகளாக உள்ளன. பூடான் மன்னரின் இந்த சுற்றுப்பயணமானது, இருதரப்பு ஒத்துழைப்பை ஆய்வு செய்வதற்கும், பல்வேறு துறைகளில் கூட்டாண்மையை மேலும் முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் வாய்ப்பை வழங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து