Idhayam Matrimony

கார்டினலாக இன்று பதவியேற்கிறார் கேரள பாதிரியார் ஜார்ஜ் ஜேக்கப் வாடிகன் சென்ற இந்திய குழு

வெள்ளிக்கிழமை, 6 டிசம்பர் 2024      இந்தியா
Jorge 2024-12-06

Source: provided

புது டெல்லி: கேரள பாதிரியார் ஒருவர் மிக மதிப்புமிக்க கார்டினலாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான பதவியேற்பு விழா இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்க இந்தியாவில் இருந்து மத்திய அமைச்சர் தலைமையில் ஒரு குழு வாடிகன் சென்றுள்ளது. 

உலகம் முழுவதும் கத்தோலிக்க தலைமை குருவாக போற்றப்படுபவர் போப் பிரான்சிஸ். இவருக்கு ஆலோசனை கூறவும், கத்தோலிக்க சமய முக்கிய முடிவுகள் எடுக்கப்படுவதிலும் கார்டினல்களுக்கு முக்கிய பங்கு உண்டு. 

போப் தேர்வில் ஓட்டு போடும் தகுதியும் கார்டினல்களுக்கு உண்டு. பல்வேறு மறை மாவட்டத்திற்கு தலைமையாக கார்டினல் செயல்படுவார். உலகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட கார்டினல்கள் தேர்வு செய்யப்பட்டு போப்பால் நியமனம் செய்து உத்தரவிடப்படும்.

இந்த முக்கிய கார்டினல் பொறுப்பில் இந்தியாவில் இருந்து கேரளாவின் செங்கனாச்சேரியை சேர்ந்த மான்சிக்னார் ஜார்ஜ் ஜேக்கப் கோவாக்காட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரது பதவியேற்பு நிகழ்ச்சி இன்று 7-ம் தேதி வாடிகனில் நடக்கிறது.

இந்த விழாவில் பங்கேற்க இந்திய குழுவினர் செல்ல பிரதமர் மோடி ஆணையிட்டுள்ளார். இதன்படி மத்திய மீன்வளத்துறை அமைச்சர் ஜார்ஜ் குரியன் தலைமையில் காங்கிரஸ் எம்.பி. கொடிக்குனில் சுரேஷ், ராஜ்யசபா எம்.பி. சதம்சிங் சாந்து, பா.ஜ.க. வை சேர்ந்த அனில் ஆண்டனி, அனூப் ஆண்டனி, தாம் வடக்கன் ஆகியோர் வாடிகன் சென்றுள்ளனர்.

கார்டினல் பொறுப்பேற்பு நிகழ்வில் இந்திய அரசு சார்பில் ஒரு குழுவினர் பங்கேற்பது , கிறிஸ்துவ சமூகத்திற்கு கிடைத்த பெரும் மரியாதை ஆகும். மேலும் இந்தியர்களை இது கவுரவப்படுத்துகிறது. இந்த ஏற்பாட்டை செய்துள்ள பிரதமர் மோடிக்கு நன்றி. இவ்வாறு வாடிகன் செல்லும் குழுவில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து