முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவிலேயே குறைந்த விலையில் மின்சாரம் வழங்குவது தமிழகம்தான் : அமைச்சர் செந்தில் பாலாஜி பெருமிதம்

ஞாயிற்றுக்கிழமை, 8 டிசம்பர் 2024      தமிழகம்
Senthil-Balaji 2023 03 27

Source: provided

கரூர் : இந்தியாவிலேயே ஒரு யூனிட் மின்சாரம் குறைந்த விலையில் வழங்குவது தமிழகம்தான் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

கரூர் மற்றும் கிருஷ்ணராயபுரம் சட்டப் பேரவைத் தொகுதி பொதுமக்களை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி சந்தித்து மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.  இந்நிகழ்வில்  அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்று பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். 

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, 

முதல்வர் மு.க.ஸ்டாலினை மீண்டும் தமிழக முதல்வராக்க மக்கள் முடிவு செய்து விட்டனர். தமிழக முதல்வர், எந்த காலத்திலும் குறிப்பாக மின்வாரியம் சம்பந்தமாக அதானியை சந்திக்கவில்லை என ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதற்கு பிறகும் அந்த அறிக்கை குறித்து கருத்துக்கள் முன் வைக்கப்படுகிறது. 

ஒன்று ஒரு முறை படித்து தெரிந்திருக்கலாம். படித்து புரியவில்லை என்றால் பலமுறை படித்து யோசித்திருக்கலாம். புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் தெரிந்தவர்களிடம் விளக்கத்தை கேட்டு, சரி பண்ணி கொள்ளலாம். படித்தும் புரியவில்லை, தெரிந்தவர்களிடம் கேட்டும் புரிந்து கொள்ள பக்குவமும் இல்லை. அந்தளவுக்கு அறிவுத்திறனும் இல்லை.

பா.ஜ.க.வில் யாரும் ஜாமீனில் வந்து அமைச்சராகவில்லையா? அவர்கள் சொல்லக்கூடிய குற்றசாட்டு என்பது ரூ.7.01 மின்சாரம் வாங்கியது. இது கடந்த ஆட்சியில் போடப்பட்ட மின் ஒப்பந்தம். நாங்கள் ஒப்பந்தம் போட்டதை போல, எங்கள் அரசு ஒப்பந்தம் போட்டதை போல ஒரு தோற்றத்தை மக்கள் மத்தியில் உருவாக்க முயற்சி செய்கின்றனர். அந்த முயற்சி ஒரு போதும் எடுபடாது, அது மக்களுக்கு தெளிவாக தெரியும்.

அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் வழங்கப்பட்ட நிதி என்பது சுப்ரீம் கோர்ட் வரை சென்று வழக்கு நிலுவையில் உள்ளது. நாங்கள் தடையாணை கேட்டோம். வழங்கப்படவில்லை. அதனால், அந்த நிதி விடுவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவிலேயே ஒரு யூனிட் மின்சாரம் குறைந்த விலையில் வழங்குவது தமிழகம் தான். சிலர் வெளிநாடுக்கு போய் படித்ததாகக் கூறுகின்றனர். அந்த குழுவில் 11 பேர் சென்றனர். அதில், சேலம் கலெக்டராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான ரோகிணி சென்றிருந்தார். ஆனால் அதுகுறித்து தகவல் இல்லை. 

யாரும் படிக்காததை படித்து வந்தது போலவும், அந்த படிப்பினால் ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்குவது போல செய்திகள் வருகின்றன. ஆண்டுதோறும் இந்த பயிற்சிக்கு 10, 12 பேர் 15 பேர் வரை செல்கின்றன்ர. அந்த குழுவில் 3 ஐ.ஏ.எஸ்., 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடம் பெற்றிருந்தனர். 

எந்த இடத்திலும் மக்கள் செல்வாக்கு இல்லாத நபர்களுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து செய்திகள் வெளியிடுகின்றன. அந்த பயிற்சிக்கு அரசியல்வாதிகளும் செல்லலாம், பத்திரிக்கையாளர்களும் செல்வார்கள். மத்திய அரசு அவர்களை தேர்வு செய்து அனுப்பி வைக்கிறது. அந்த 11-ல் ஒன்றுதான் அவர். இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து