முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக செஸ் சாம்பியன்ஷிப்:குகேஷ்-லிரென் இடையிலான 13-வது சுற்று ஆட்டம் 'டிரா'

புதன்கிழமை, 11 டிசம்பர் 2024      விளையாட்டு
11-Ram-56

Source: provided

சிங்கப்பூர்: உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் குகேஷ்-லிரென் இடையிலான 13வது சுற்று ஆட்டம் டிராவில் முடிந்துள்ளது. 

14 சுற்றுகள்... 

தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் இதுவரை 12 சுற்றுகள் முடிந்துள்ளது. இருவரும் தலா 6 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளனர். இதில் 3-வது மற்றும் 11-வது சுற்றில் குகேசும், முதலாவது மற்றும் 12-வது சுற்றில் லிரெனும் வெற்றி பெற்றனர். மற்ற ஆட்டங்கள் 'டிரா'வில் முடிந்தது.

கடைசி சுற்றில்... 

இந்த நிலையில் இந்த போட்டியின் 13வது சுற்று ஆட்டம் இன்று நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டமும் டிராவில் முடிந்தது. இதன் காரணமாக இருவரும் தற்போது 6.5 புள்ளிகளுடன் சமனில் உள்ளனர். இன்று கடைசி சுற்று (14வது சுற்று) ஆட்டம் நடைபெறுகிறது. நேற்று நடைபெற்ற கடைசி சுற்று ஆட்டத்தில் யாராவது வெற்றி பெற்றால் வெற்றி பெற்றவர் சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றுவார். ஒருவேளை நாளை நடைபெறும் கடைசி சுற்று ஆட்டமும் டிராவில் முடிந்தால் வரும் 13ம் தேதி டை பிரேக்கர் முறை கடைப்பிடிக்கப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து