முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு: லாஸ் ஏஞ்சல்ஸில் 15 சதவீதம் தீ மட்டுமே கட்டுக்குள் வந்துள்ளது

திங்கட்கிழமை, 13 ஜனவரி 2025      தமிழகம்
Fire

Source: provided

வாஷிங்டன்: அமெரிக்காவில் காட்டுத்தீயில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ள நிலையில்,  இதுவரை 15 சதவீதம் தீ மட்டுமே 

கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.   

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த 7-ந்தேதி பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த காட்டுத்தீ மளமளவென அங்கிருந்த மற்ற பகுதிகளுக்கும் பரவி வருகிறது. இதனால் சுமார் 36 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி இதுவரை எரிந்து நாசமாகி உள்ளன. மேலும் ஹாலிவுட் பிரபலங்கள் உள்பட சுமார் 12 ஆயிரம் பேரின் வீடுகள் தீக்கிரையாகின. எனவே வீடுகளை இழந்த மக்கள் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

இதற்கிடையே காட்டுத்தீயில் சிக்கி 8 பேர் பலியாகி உள்ளனர். தொடர்ந்து பரவி வரும் காட்டுத்தீயால் தற்போது பலி எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 15 சதவீதம் தீ மட்டுமே கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு இருப்பதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். எனவே காட்டுத்தீயை அணைக்கும் பணியில் நூற்றுக்கணக்கான விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. உயிரிழந்தவர்களில் 8 பேர் பாலிசேட்ஸ் தீ மண்டலத்திலும், 16 பேர் ஈடன் தீ மண்டலத்திலும் கண்டெடுக்கப்பட்டனர்.

கலிபோர்னியா ஆளுநர் கேவின் நியூசம் கூறுகையில், லாஸ் ஏஞ்சல்ஸைச் சுற்றி பரவி வரும் காட்டுத்தீக்கு இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா வரலாற்றில் இது ஒரு மிகப்பெரிய இயற்கை பேரழிவு. இந்த பேரழிவு ஆயிரக்கணக்கான வீடுகளை அழித்துவிட்டது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து