முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி சட்டப்பேரவை தேர்தல்: பாரதிய ஜனதா நட்சத்திர பேச்சாளர்கள் அறிவிப்பு

வியாழக்கிழமை, 16 ஜனவரி 2025      அரசியல்
BJP-2025-01-16

புது டெல்லி, டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பாரதிய ஜனதா கட்சியின் 40 நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட அக்கட்சியின் ஏழு முதல்வர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்தப் பட்டியலில் போஜ்புரி நட்சத்திரங்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனோஜ் திவாரி, ரவி கிஷண் உள்ளிட்ட பூர்வாஞ்சலி தலைவர்கள், தினேஷ் லால் யாதவ் நிராஹுவா உள்ளனர். கிழக்கு உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாக அறியப்படும் பிகாரைச் சேர்ந்த பூர்வாஞ்சலிகள் தலைநகரில் கணிசமான வாக்கு வங்கியாக உள்ளனர். அதனால், அவர்களை ஈர்க்கும் வகையில் பிரசாரத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

நட்சத்திர பிரச்சாரகர்களாக மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, சிவராஜ் சிங் செளகான், மனோகர் லால் கட்டார், பியூஷ் கோயல், தர்மேந்திர பிரதான், ஹர்தீப் சிங் புரி, கிரிராஜ் சிங் ஆகியோரின் பெயர்களும் பட்டியலில் உள்ளன. முதல்வர்கள் வரிசையில் தேவேந்திர ஃபட்னவீஸ், ஹிமந்தா பிஸ்வா சர்மா, புஷ்கர் சிங் தாமி, யோகி ஆதித்யநாத், பஜன் லால் சர்மா, நாயப் சிங் சைனி, மோகன் யாதவ் ஆகியோர் நட்சத்திரப் பிரச்சாரகர்களாக டெல்லி தேர்தலில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வார்கள்.

இந்தப் பட்டியலில் டெல்லியில் உள்ள பாஜகவின் ஏழு எம்.பி.க்களும் இடம் பெற்றுள்ளனர். டெல்லி பாஜக பொறுப்பாளர் பைஜயந்த் பாண்டா, இணைப் பொறுப்பாளர் அல்கா குர்ஜார், கட்சியின் மாநிலத் தலைவர் வீரேந்திர சச்தேவா ஆகியோரும் நட்சத்திரப் பேச்சாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லியில் 1998 முதல் ஆட்சியில் இல்லாத பாஜக, 2015 முதல் தலைநகரை ஆட்சி செய்து வரும் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியை வீழ்த்த ஒருங்கிணைந்த பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இத்தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தலைநகரில் இரண்டு அல்லது மூன்று பேரணிகளில் பேச வாய்ப்புள்ளது என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நகரத்தின் ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் ஏழு தேர்தல் பேரணிகளில் பங்கேற்கக்கூடும் என்றும் பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து